தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 3 கடைசி நாள்!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவிகித இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2021-22 கல்வியாண்டு கடந்த ஜூன் 14 முதல் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டுதோறும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் உள்ள அனைத்து சிறுபான்மையின தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீட்டில் இலவசமாக மாணவர் சேர்க்கை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழங்க ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 3 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு பட்டியல் நாடுகளுக்கு செல்ல 3 ஆண்டுகள் தடை – செளதி அரேபியா அரசு அறிவிப்பு!
அதன்படி, கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள தனியார் பள்ளிகளில் இலவசமாக சேர்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் விண்ணப்பித்த நிலையில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் செலுத்தியிருந்த விண்ணப்பங்களில் இருந்து 2-வது சுற்று குழுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்ய ஜூலை 22 ஆம் தேதி அனைத்து பள்ளிகளிலும் குலுக்கல் முறை நடைபெற்றது.
TN Job “FB
Group” Join Now
அதில் 764 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் சம்மந்தப்பட்ட பள்ளிகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் சேர்க்கை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் கல்வி உரிமை சட்ட இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.