சென்னையில் இலவச ஆவின் பால் விநியோகம் – தலைமை செயலாளர் தகவல்!

0
சென்னையில் இலவச ஆவின் பால் விநியோகம் - தலைமை செயலாளர் தகவல்!
சென்னையில் இலவச ஆவின் பால் விநியோகம் - தலைமை செயலாளர் தகவல்!
சென்னையில் இலவச ஆவின் பால் விநியோகம் – தலைமை செயலாளர் தகவல்!

மழையால் பாதிக்கப்பட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் நாளை இலவசமாக ஆவின் பால் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவின் பால் விநியோகம்:

கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிக கன மழை பெய்து வந்தது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் சூழ்ந்து காணப்படுகிறது. ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் குடியிருப்பு பகுதிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

நகரும் மிக்ஜாம் புயல் – மீண்டும் வரும் சென்னை.. பணிகள் தீவிரம்!

இதனால் இன்று சென்னையின் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆவின் பால் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. இதே போல் சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாளையும் இலவசமாக ஆவின்பால் தரப்படும் என்று தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தெரிவித்துள்ளார். மழைநீர் தேங்கிய பகுதிகளில் மக்களை மீட்பதற்காக மீனவர்களின் படகுகள் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!