அத்தியாவசிய செலவுகளை கூட சமாளிக்க கஷ்டமா இருக்கா?.. அப்போ மறக்காம இத செஞ்சுப்பாருங்க..!!
வீடு கட்டுமானம், கல்வி மற்றும் மருத்துவ செலவுகள் போன்ற முக்கியமான இலக்குகளுக்காக பெரும்பாலான மக்கள் அதிகமாக கடன் வாங்குகின்றனர். மேலும், இந்த கடனுக்கு குறைந்த வட்டி விகிதம் இருந்தாலும் கடனை அடைக்க ஒரு நல்ல திட்டமிடல் இல்லாமல் போனால் வாங்கிய கடன் உங்களுக்கு சுமையாக மாறிவிடும். இந்நிலையில் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது குறித்து கீழே விரிவாக காண்போம்.
அதாவது அத்தியாவசிய செலவுகளான மின்சாரக் கட்டணம், மொபைல் ரீசார்ஜ், குழந்தைகளின் பள்ளிக் கட்டணம் மற்றும் மளிகைச் செலவு போன்றவற்றை தவிர்க்க முடியாது என்பதால் இவற்றிற்காக முன்கூட்டியே பணம் ஒதுக்க வேண்டும். மேலும், அடிக்கடி உணவு ஆர்டர் செய்தல், தேவையற்ற பொருட்களை வாங்குதல் போன்றவற்றைத் தவிர்ப்பதன் மூலம் பண தட்டுப்பாட்டை தவிர்க்கலாம். இதை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அவசரத் தேவைகளுக்காக சிறிதளவு பணத்தை சேமித்து வைத்தால் மாதக் கடைசியில் பணப் பிரச்சனை ஏற்படாது. மேலும், எதற்கு அதிகம் செலவு செய்கிறோம் என்பதை கணக்கிட்டு அந்த செலவுகளை தவிர்ப்பது நல்லது என நிதி நிபுணர்கள் கூறிகின்றனர்.


























