
செவ்வாய் கிரகம் சிவப்ப இருக்க அட இதுதான் காரணமா..? அட தண்ணீரும் இருக்க…? விஞ்ஞானிகள் வெளியிட்ட புதிய தகவல்..!!
விண்வெளியில் சூரியனையோ அல்லது வேறு ஏதேனும் நட்சத்திரத்தையோ சுற்றி நகரும் விண் மண்டலங்களே கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. மேலும், சூரிய மண்டலத்தை சுற்றி எட்டு கோள்கள் இயங்கிவருகின்றன. இதில் பூமியை தவிர வேறு எங்கும் மனிதர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
List of Official Languages of Indian States and Union Territories – Free PDF Download
அதாவது, செவ்வாய் கிரகத்தில் பரவலாக இருக்கும் உலர்ந்த “ஹெமடைட்” (hematite) என்ற கனிமத்தால் தான் இக்கிரகம் சிவப்பாக தோன்றுவதாக நம்பப்பட்டது. ஆனால் “ஃபெரிஹைட்ரைட்” (Ferrihydrite) எனப்படும் தண்ணீரைக் கொண்ட இரும்பு ஆக்சைடு ரசாயனம் தான் செவ்வாய் கிரகத்தின் சிவப்பு நிறத்திற்கு காரணம் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், “Nature Communications என்ற இதழில் வெளியாகியுள்ள கூற்றுப்படி ஃபெரிஹைட்ரைட் ஆக்சைடு செவ்வாய் கிரகம் முழுவதும் பரவி இருப்பதால் அக்கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஃபெரிஹைட்ரைட் கனிமம், குளிர்ந்த நீர் நிலைகளில் மட்டுமே உருவாகக்கூடும் என்ற காரணத்தால் செவ்வாய் கிரகம் வறண்ட நிலமாக மாறுவதற்கு முன்பு தண்ணீர் தாங்கும் திறன் கொண்டதாக இருந்திருக்கலாம்” என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.


























