பொங்கல் பரிசு வாங்க முகக்கவசம் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!!

0
பொங்கல் பரிசு முகக்கவசம் கட்டாயம்-தமிழக அரசு அறிவிப்பு!!!
பொங்கல் பரிசு முகக்கவசம் கட்டாயம்-தமிழக அரசு அறிவிப்பு!!!
பொங்கல் பரிசு வாங்க முகக்கவசம் கட்டாயம்-தமிழக அரசு அறிவிப்பு!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த பொங்கல் பரிசினை பெறுவதற்கான முக்கிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கிய அம்சமாக முகக்கவசம் அணிவது உள்ளது.

பொங்கல் பரிசு விதிமுறைகள்:

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக மக்களின் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசில் ரூபாய் 2500 ரொக்கமும், 1கி பச்சரிசி, 1கி சர்க்கரை, 20கிராம் உலர் திராட்சை,20கிராம் முந்திரி, 5கிராம் ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்படுகின்றன.

மாவட்ட நீதிபதி பணியிட முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – 6 பேர் மட்டுமே தேர்ச்சி!!

ஜனவரி மாதம் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான டோக்கன் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று வழங்குவார்கள். டோக்கன் வழங்கிய அட்டைதாரர்கள் டோக்கெனில் குறிப்பிட்ட தேதிகளில் சென்று பொங்கல் பரிசினை பெற்று கொள்ளலாம். அவ்வாறு அந்த தேதிகளில் தவறியவர்களுக்கு ஜனவரி 13-ஆம் தேதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொங்கல் பரிசு வாங்குவதற்கான சில விதிமுறைகளை தமிழக அரசு சார்பாக அறிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 26-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரை வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும். ஒரு நாளைக்கு 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பரிசு வழங்கப்படும் போது 2500 ரொக்கமும் மற்றும் பொங்கல் பொருள்களும் ஒன்றாக மட்டுமே வழங்க வேண்டும்.

பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு!!

மேலும் பொங்கல் பரிசு தொகை வழங்கல் தொடர்பான உறுதி செய்தியை சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி வழியாக சென்றடைதல் வேண்டும். மேலும் பொதுமக்கள் தங்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கடைகளுக்கு வரும்பொழுது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும் குடும்ப உறுப்பினர்கள் யார் வானத்திலும் தொகை வழங்கப்படும் எனவே கூட்ட நெரிசல் ஏற்படாமல் மக்கள் சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here