உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!

0
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - யுஜிசி அறிவிப்பு!!
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - யுஜிசி அறிவிப்பு!!
உயர்கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!

நடப்பு கல்வியாண்டில் உயர்கல்வி மாணவர்களுக்கான புதிதாக உதவித்தொகை பெற அல்லது ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவித்துள்ளது.

மாணவர்களுக்கான உதவித்தொகை:

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான அரசு உதவித்தொகை 4 கல்வித்தொகை திட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முதுகலை பயிலும் மாணவிகளுக்கான கல்வித்தொகை, பல்கலைக்கழக அளவில் முதன்மை மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, வட கிழக்கு மாநிலங்களுக்கான இஷான் உதய் சிறப்பு உதவித்தொகை மற்றும் முதுகலை பயிலும் SC, ST மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆகியவற்றிற்கான உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து?? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!!!

தற்போது இந்த திட்டங்களில் பயன்பெறும் மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பித்து விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களை பெற்று அதனை சரிபார்த்து, புதிதாக விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களையும் சேர்த்து வருகிற பிப்ரவரி 5-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழக மானிய குழுவிற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடைகளுக்கான 2021ஆம் ஆண்டு விடுமுறை நாட்கள் – தமிழக அரசு அறிவிப்பு!!

தேசிய கல்வித்தொகை திட்டத்தின் கீழ் இந்த 4 பிரிவு மாணவர்களும் பயன்பெற http//scholarships.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!