BE தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரூ.70,000/- சம்பளத்தில் புதிய வேலைவாய்ப்பு!
ERNET India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Manager, Project Engineer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப்பணியிடங்கள்:
Project Manager, Project Engineer, Senior Project Engineer பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / M.Sc / MCA / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35,40,45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
AIIMS-ல் Scientist-I காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.70,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

























