EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி முதலாளியின் ஒப்புதலின்றி உங்களது தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம்..

0
EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி முதலாளியின் ஒப்புதலின்றி உங்களது தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம்..
EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி முதலாளியின் ஒப்புதலின்றி உங்களது தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம்..

EPFO உறுப்பினர்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி முதலாளியின் ஒப்புதலின்றி உங்களது தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம்.

முன்னதாக, EPF உறுப்பினர்கள் தங்களது ப்ரொஃபைலை அப்டேட் செய்ய வேண்டும் என்றால் பணியாற்றும் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒப்புதல் அல்லது முதலாளியின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. இதனால் உறுப்பினருக்கு  தேவையான நிதி சரியான நேரத்தில் கிடைப்பதில்லை என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களுக்கான ப்ரொஃபைல்களை அப்டேட் செய்வதற்கான விதிகளில் மாற்றங்களைச் செய்துள்ளது.

TNPSC Group II, IIA & IV General Tamil  Quiz with Answer || Unit 2   Part C  – PDF Download…!!

அதாவது, EPF உறுப்பினர்கள் தங்கள் ஆதார் இணைக்கப்பட்ட யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) பயன்படுத்தி, எந்த ஆவணங்களையும் அப்லோடு செய்யாமல் தனிப்பட்ட விவரங்களை அப்டேட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் EPF ப்ரொஃபைலை ஆன்லைனில் அப்டேட் செய்ய முதலில் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in மூலம் யூனிஃபைட் மெம்பர் போர்ட்டலுக்கு செல்லவும். பின்னர் உங்கள் UAN, பாஸ்வேர்ட் மற்றும் கேப்ட்சாவை என்டர் செய்து லாகின் செய்யவும். இதை தொடர்ந்து, “மேனேஜ்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து “மாடிஃபை பேசிக் டீடெயில்ஸ்'” என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும். இறுதியாக உங்கள் ஆதார் அட்டையின் படி, உங்களின் புதிய தகவல்களான பெயர், பிறந்த தேதி, பாலினம், குடியுரிமை, பெற்றோரின் பெயர், திருமண ஸ்டேட்டஸ், மனைவியின் பெயர், பணியில் சேர்ந்த தேதி மற்றும் வேலையை விட்டு வெளியேறும் தேதி போன்ற தகவல்களை என்டர் செய்து சப்மிட் செய்வதன் மூலம் உங்களது ப்ரொஃபைல்களை அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!