
PF ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி.. இனி பணத்தை கிளைம் செய்ய காத்திருக்க தேவையில்லை.. EPFO நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஓய்வூதியத் திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் ஊழியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் வைப்புத்தொகையை, ஊழியர்கள் தங்களின் தேவைக்காக கிளைம் செய்து கொள்ளலாம். அப்பணத்தை கிளைம் செய்ய நாள்தோறும் 36 ஆயிரம் பேர் வரை தங்களது வங்கி கணக்கை இணைக்க கோரிக்கை வைப்பதாகவும், அந்த கோரிக்கை நிறைவேற 3 நாட்களுக்கு மேல் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக PF கணக்கிலிருந்து பணம் எடுக்கும் வழிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “தொழிலாளர்கள் PF பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் போது, செக் லீஃப் அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் புகைப்படங்களை இனி பதிவேற்றம் செய்ய வேண்டியதில்லை என EPF நிர்வாகம் தெரிவித்துள்ளது”. மேலும், சோதனை செய்யப்பட்ட இம்முறை, வெற்றிகரமாக உள்ளதால், இதை முழுமையாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளாதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, “UAN எண்ணுடன் வங்கி கணக்கை இணைப்பதற்கு வேலை செய்யும் நிறுவனங்களின் ஒப்புதல் தேவையில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது”. இதனால், ஊழியர்கள் மட்டுமின்றி, வேலை பார்க்கும் நிறுவனங்களும் பயன் பெறுவர் என EPF நிறுவனம் தெரிவித்துள்ளது.

























