Airports Authority of India-வில் ரூ.1,40,000/- ஊதியத்தில் வேலை – 300+ காலிப்பணியிடங்கள் || உடனே விரையுங்கள்!
இந்திய விமான நிலைய ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Executive (Air Traffic Control) பணிக்கென காலியாக உள்ள 309 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
AAI காலிப்பணியிடங்கள்:
Junior Executive (Air Traffic Control) பணிக்கென காலியாக உள்ள 309 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc in Physics and Mathematics தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
NIELIT ஆணையத்தில் Senior Advisor வேலை – சம்பளம்: ரூ.1,80,000/- || நேர்காணல் மட்டுமே!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AAI தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் Computer Based Test / Voice Test / Psychoactive Substances Test / Psychological Assessment / Physical Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 24.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.























