இன்ஜினியரிங் இறுதி செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்!
அண்ணா பல்கலைக்கழக இன்ஜினியரிங் கல்லுரிகளில் அரியர் உட்பட அனைத்து மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு தேதி தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இறுதி செமஸ்டர் தேர்வு தேதி மாற்றம்:
கொரோனா நோய் தொற்று காரணமாக இறுதி செமஸ்டர் தேர்வு தவிர அனைத்து தேர்வுகளுக்கும் ரத்து செய்யப்பட்டன. யுஜிசி வழிகாட்டுதலின் படி, அண்ணா பல்கலைக்கழகம் வரும் 21 ஆம் தேதி முதல் ஆன்லைனிலில் இறுதி செமஸ்டர் தேர்வு நடைபெறும் என அறிவித்தது. மேலும் அதற்கான தேர்வு அட்டவணையும் கடந்த 2 நாட்களுக்கு முன்னால் வெளிவந்தன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் அரியர் உட்பட அனைத்து மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்துள்ளது. அதாவது, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுரிகள் உறுப்பு கல்லுரிகள் மற்றும் இணைப்பு கல்லுரிகள் அனைத்திலும் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் நடைபெறும் எனவும், மேலும் அதற்கான புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Download Paper Cut News
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்