தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பு முகாம்!

0
தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை முடித்தவர்கள் கவனத்திற்கு - வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை முடித்தவர்கள் கவனத்திற்கு - வேலைவாய்ப்பு முகாம்!
தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பு முகாம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. இதனை தொடர்ந்து கடலூரில் வருகிற மார்ச் 26ம் தேதி அன்று தனியார் துறைகள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலையில்லா இளைஞர்கள் பங்குபெற்று கலந்து கொண்டு பயன் பெற்று கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து கடலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வருகிற மார்ச் 26ம் தேதி நடைபெற உள்ளது. இம்முகாம் கடலூரில் உள்ள பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதில் கலந்து விருப்பம் உள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அமைச்சரின் உத்தரவு!

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வரை கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து 5000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான மற்றும் தகுதியான பணிகளை பெற்று கொள்ளலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் ரத்து செய்யப்பட மாட்டாது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் நகல்கள் மற்றும் தங்களின் சுய விவரக்குறிப்புடன் நேரடியாக வருகை தர வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற விரும்புவர்கள் 04142-290039, 94990 55909 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!