தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் - அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றோருக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் ஐ.பெரியசாமி உறுதி!

தமிழகத்தில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு, நகைகள் திருப்பி தரப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நேற்று நடந்த, நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைகளை திருப்பித் தரும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

மார்ச் மாத இறுதிக்குள் நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய வாக்குறுதியாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வீதம் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும். தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் அளவிலான, நகைகளை வைத்து நகைக்கடன் வாங்கியவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக மு.க.ஸ்டாலின் அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில், 16 கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்கு 13,595 பயனாளிகள் தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கடன் தொகை ரூ.66.75 கோடி (அசல் மற்றும் வட்டியுடன்) தள்ளுபடி செய்யப்பட்டு, தள்ளுபடி சான்றிதழும் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 8ம் வகுப்பு முதல் இன்ஜினியரிங் வரை முடித்தவர்கள் கவனத்திற்கு – வேலைவாய்ப்பு முகாம்!

நேற்று,சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைகளை திருப்பித் தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு 165 பயனாளிகளுக்கு நகைகளை வழங்கினார். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது தமிழக மக்களின் குறைகள் அனைத்தையும், தீர்க்க திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி இது போன்ற சலுகைகளை இதுவரை வேறு எந்த ஆட்சியாளர்களும் கொடுத்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

தேர்தல் வாக்குறுதியாக அளித்த அனைத்து நலத் திட்டங்களின் பலனை அனைவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு சேர்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் உள்ள 14.40 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் கோடி பொது நகைக்கடன் வரும் 31ம் தேதிக்குள் தள்ளுபடி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழுடன்,அடகு வைக்கப்பட்ட 5 பவுன் நகையும் திரும்பி வழங்கப்படும். விடுபட்ட தகுதியான நபர்கள் விண்ணப்பித்தால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். மேலும் போலி ஆவணம், போலி நகைகள் மூலம் நகைக்கடன் பெற்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!