
பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் சந்திப்பு.. இந்தியாவில் தனது வணிகத்தை நிறுவுவதற்கு எலான் போட்ட ஸ்கெட்ச்…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக பிப்ரவரி 12 முதல் 14 வரை அமெரிக்காவிற்கு செல்ல இருக்கிறார். மேலும், பிப்ரவரி 13 ஆம் தேதி பிரதமரைச் சந்திக்க தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகிகள் குழுவில் பிரதமர் மோடி பலரை காண உள்ளார். இந்நிலையில் இந்த நிர்வாகிகள் குழு சந்திப்பு பட்டியலில் பிரபல அமெரிக்க பில்லியனர் மற்றும் தொழில்முனைவோர் ஒருவர் உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
List of National Parks in India with states 2025 – PDF Download
அதாவது, “டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் தற்போது ஆலோசகர் பதவியை வகிக்கும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அடுத்த வாரம் அமெரிக்கப் பயணத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த சந்திப்பில் இந்தியாவில் டெஸ்லா கார் விற்பனை குறித்தும், ஸ்டார்லிங் இணைய சேவை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது”.























