“இனி அரசாங்க பொறுப்பில் அதிகம் நேரம் பங்களிக்க போவதில்லை”.. எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு..!!
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 47 வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதன் பின்னர் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் செய்த டிரம்ப் அமெரிக்க அரசின் செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க செயல்திறன் துறை (DOGE) யை உருவாக்கினார். இந்த துறைக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமனம் செய்தார். மேலும், சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகவுள்ளதாக தகவல் வெளியானது.
DRDO ஆணையத்தில் Scientist வேலை – ரூ.1,31,100/- சம்பளம் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
இந்நிலையில் இன்று (23-04-2025) “அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறை பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ஏனெனில் டெஸ்லா நிறுவனத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மற்றும் கார் விற்பனை சரிவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மஸ்க் தெரிவித்துள்ளார்”.


























