சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க தனி டிக்கெட் ?- குழப்பத்தில் பயணிகள்!

0
சென்னை மின்சார ரயில்களில் பயணிக்க தனி டிக்கெட் ?- குழப்பத்தில் பயணிகள்!

சென்னை புறநகர் எலக்ட்ரிக் ரயில்களில் பயணிப்பதற்கு விரைவு ரயில் பயணிகள் தனி கட்டணம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளதால் பயணிகள் மத்தியில் குழப்பங்கள் எழுந்துள்ளது.

எலக்ட்ரிக் ரயில்கள்:

பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி சென்னைக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் வழியே பயணிக்கின்றனர். விரைவு ரயில்களுக்கான டிக்கெட் எடுத்திருக்கும் பயணிகள் அதே டிக்கெட்டின் வாயிலாகவே எலக்ட்ரிக் ரயில்களில் பயணிக்கலாம் என்று விதிகள் உள்ளது. ஆனால் சமீபத்தில் தாம்பரம் , திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கு பயணிக்கும் போது பயண சீட்டு பரிசோதகர்கள் பயணிகளுக்கு அபராதம் விதிப்பதாக புகார்கள் எழுந்தது. இவை ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து தெற்கு ரயில்வே துறை வணிக மேலாளர் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மத்திய அரசில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || உடனே விண்ணப்பியுங்கள்!

அதன்படி ரயில்வே வாரியத்தின் 2015 ஆம் ஆண்டு உத்தரவுப்படி, விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து உயர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் இடையில் உள்ள நிறுத்தங்களில் இறங்கினால் அந்த ரயில் சென்றடையும் நிலையம் வரை மின்சார ரயிலில் அதே தடத்தில் பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரயில்வே விதிகள் தொடர்பாக ரயில்வே அலுவலர்கள் பயண சீட்டு பரிசோதர்களுக்கு முறையாக வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரப்வின்படி விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அதேதடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் செல்வதற்கு தனியாக டிக்கெட் எடுக்க தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!