மாணவர்களே உஷார்…கல்விக் கடன் வாங்க போறீங்களா..?? ” அப்போ, இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

0
மாணவர்களே உஷார்…கல்விக் கடன் வாங்க போறீங்களா..?? ” அப்போ, இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

இந்தியாவில் உள்ள பெற்றோர்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, செலவுகளை பொருட்படுத்தாமல் கல்வி கற்க வைக்கின்றனர். மேலும் சிலர், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வி கடன் பெற்று படிப்பை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், வெளிநாடுகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் இந்திய மாணவர்களுக்கு கல்வி கடனானது ஒரு உதவி கரமாக உள்ளது. அந்த வகையில், நீங்களும் கல்வி கடனை வாங்க போகிறீர்கள் என்றால், இந்த பதிவை கட்டாயம் படிக்கவும். அதுமட்டுமின்றி, பொறியியல், மேலாண்மை மற்றும் மருத்துவம் போன்ற உயர் படிப்புகளுக்கான கல்வி கட்டணமானது வேறுபாடு அடையும் என்பதால், உங்களுடைய தேவைகளை பொறுத்து கல்வி கடனை எப்படி பெறுவது மற்றும் அதன் வட்டி விகிதங்கள் பற்றிய விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

அதாவது, நீங்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறும் போது, சொத்து அல்லது நிலையான வைப்பு போன்ற ஏதேனும் ஒன்றை பிணையமாக வைப்பது மூலம் குறைவான வட்டி விகிதத்தில் கல்வி கடனை பெறமுடியும். அதேபோல், பிணையம் வைக்காமல் கடனை பெறுவதன் மூலம் வட்டி அதிகமாக உங்களிடமிருந்து வசூலிக்கப்படும். மேலும், கல்வி கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஒவ்வொரு வங்கியை பொறுத்த வகையில் 8.5% முதல் 16% வரை மாறுபடும். அதாவது, பொதுத்துறை வங்கிகளில் குறைந்த வட்டியும், தனியார் வங்கிகளில் அதிக வட்டியும் நம்மிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

வேலை இல்லாதவர்களுக்கு மாதம் ரூ. 3000 ..!! ” சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க”..!!

கல்விக் கடன் பெறுவதற்கான தகுதி:

முதலில் இந்திய குடிமகனாக இருப்பது அவசியம். மேலும், இந்தியா அல்லது வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சேர்க்கை இருக்க வேண்டும் மற்றும் பாடநெறி வகைகளை குறிப்பிட வேண்டும். முக்கியமாக, மாணவர்களின் கல்வி பதிவு மற்றும் இணை விண்ணப்பதாரரின் வருமான சான்று சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பாக, கடன் பெறும் போது செயலாக்க கட்டணம், நிர்வாக கட்டணம் மற்றும் தாமதமாக கடனை செலுத்தும் போது அபராதம் போன்ற விதிமுறைகள் ஒப்பந்தங்களில் சில நேரம் மறைக்கப்பட்டு இருக்கும் என்பதால், ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனமாக படிப்பது என்பது மிகவும் அவசியம் ஆகும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!