நீலகிரியில் இ-பாஸ் சோதனை சாவடிகள் குறைப்பு.. மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி நடவடிக்கை.!!
கோடை விடுமுறை சீசன் காலங்களில் நீலகிரிக்கு வரும் அதிகளவிலான சுற்றுலா பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த ஆண்டு மே மாதம் முதல் இ-பாஸ் நடைமுறையை சென்னை உயர்நீதிமன்றம் அமல்படுத்தியது. அதன்படி வார நாட்களில் தினசரி 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்கள் மட்டுமே நீலகிரிக்குள் அனுமதிக்கப்படும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விதி நடப்பாண்டிலும் பின்பற்றப்பட்டு நீலகிரி மாவட்ட எல்லைகளான கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி ஆகிய 16 சோதனைச்சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்யப்பட்டு வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சோதனைச் சாவடிகளில் ஏற்பட்ட சிக்னல் பிரச்சனை உள்ளிட்ட சில காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து “இன்று முதல் (22-04-2025) சோதனைச் சாவடிகளை 5 இடங்களாக குறைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர், கெத்தை ஆகிய சோதனை சாவடிகளில் மட்டும் இ-பாஸ் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.



























