சென்னையில் கொட்டி தீர்க்கும் கனமழையால் விமான சேவை பாதிப்பு..!! பயணிகள் அவதி..!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் காலை முதலே கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், பிற்பகலுக்கு பின் வானம் மெல்ல மாற தொடங்கி கனமழை பொழிந்து வருகிறது. இவ்வாறு திடீரென மாறிய வானிலையால் சென்னை விமான நிலையம் சம்பித்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பறந்த புதிய உத்தரவு..!! இத செஞ்ச 4 நாளில் நிச்சயம் இடைநீக்கம்…!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை..!!
அதாவது, சென்னையில் திடீரென கனமழை பொழிந்து வருவதால், சிங்கப்பூர், மதுரை, கோவை, திருச்சி, இலங்கையில் இருந்து வரும் விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானத்தில் வட்டமடித்து வருகின்றனர். மேலும், இதனால் சென்னையில் இருந்து புறப்பட்டு மஸ்கட், இலங்கை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட 7 இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்கள் புறப்பட முடியாமல் உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.



























