
ஆசிரியர்களுக்கு பறந்த புதிய உத்தரவு..!! இத செஞ்ச 4 நாளில் நிச்சயம் இடைநீக்கம்…!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை..!!
தமிழக பள்ளிகளில் தற்போது மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதை, தடுக்க பள்ளிக்கல்வித்துறை தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், மாணவ, மாணவிகள் இருக்கும் இடங்களில் CCTV கேமராக்களை அதிகம் வைத்து பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவிகளை விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் பேருந்தில் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து செல்லும் போது, போன்ற அனைத்து செயல்களின் போதும் ஒரு பெண் ஆசிரியையோ அல்லது ஒரு பெண் பாதுகாவலரோ உடன் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்…!! குழப்பத்தில் மாணவர்கள்..!!
,மேலும், பள்ளிகளில் Child Helpline மற்றும் பள்ளிக்கல்வித்துறை புகார் எண் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை பெரிய அளவில் வைத்து மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என யார் போக்ஸோ வழக்கில் கைதானாலும் அவர்கள் 4 நாட்களுக்குள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.























