தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் – பயணிகள் அதிருப்தி! தெற்கு ரயில்வே விளக்கம்!

0
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் - பயணிகள் அதிருப்தி! தெற்கு ரயில்வே விளக்கம்!
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் - பயணிகள் அதிருப்தி! தெற்கு ரயில்வே விளக்கம்!
தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில் – பயணிகள் அதிருப்தி! தெற்கு ரயில்வே விளக்கம்!

நாடு முழுவதும் வரும் 24ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சிறப்பு ரயில்கள் குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை தெற்கு ரயில்வே வெளியிடவில்லை.

சிறப்பு ரயில்:

இந்தியாவில் கொரோனா தாக்கத்தின் போது குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. மேலும் அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அவசர சூழலுக்கு உடனடியாக பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் மீண்டும் முன்பதிவில்லா ரயில்களை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பொறுத்து படிப்படியாக முன்பதிவில்லா ரயில்களும் இயக்கப்பட தொடங்கியது.

தற்போது ரயில்கள் வழக்கம் போல அதாவது கொரோனா பேரிடருக்கு முன்பு உள்ளது போல இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டிக்கெட் முன்பதிவு நடைபெற்றது. கிட்டத்தட்ட 25% ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது. இப்பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிப்பர். இதனால் வழக்கத்தை விட ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். அதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரயில் டிக்கெட் முன்பதிவு ஓரிரு மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கும். மேலும் பண்டிகை நேரத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும்.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. UIDAI புதிய அறிவிப்பு – இதை கட்டாயம் செஞ்சுருங்க!

Exams Daily Mobile App Download

ஆனால் தெற்கு ரயில்வேயில் இருந்து இதுவரை சிறப்பு ரயில்கள் இயக்கம் குறித்த எவ்வித அறிவிப்புகளும் வெளியாகாமல் உள்ளது. இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பிய போது கூட்ட நெரிசலுக்கு ஏற்ப, சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோவை, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் இந்த வார இறுதிக்குள் சிறப்பு ரயில் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!