ரேஷன் கடை பணியாளர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்!
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் நுகர்வோர்களிடம் கனிவான முறையில் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
புத்தாக்க பயிற்சி:
கூட்டுறவுத் துறை சார்பில் நியாய விலைக்கடை பணியாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மாரி, துணைப்பதிவாளர் அண்ணாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்ற முகாமில் ஆட்சியர் அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – மதுரை ஆட்சியர்!
தொடர்ந்து பேசிய அவர் மாவட்டத்தில் 690 முழு நேர நியாய விலைக் கடைகளும், 311 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் என மொத்தம் 1,001 அங்காடிகள் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதாக கூறினார். இதில் 639 விற்பனையாளர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. பணியாளர்கள் கடையின் பராமரிப்பு, கடை தூய்மை, பொருட்கள் இருப்பு மற்றும் பராமரிப்பு, பதிவேடுகள் பராமரிப்பு, பொது மக்களுடன் கனிவான முறையில் பழகுதல், அவர்களது உடல்நிலை பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்திலும் சிறப்பாகவும், திறமையாகவும் பணியாற்றுவது அவசியமாகிறது.
TN Job “FB
Group” Join Now
இது போன்ற புத்தாக்க பயிற்சியானது கடுமையாக உழைக்கும் பணியாளர்களின் பணி திறனையும், உடல் நலத்தையும், செயல்பாடுகளையும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக திருமயம் வட்டாரங்களில் பணியாற்றும் 100 விற்பனையாளர்களுக்கு முதற்கட்டமாக புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை விற்பனையாளர்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் கவிதா ராமு கூறியுள்ளார்.