பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – மதுரை ஆட்சியர்!

0
பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - மதுரை ஆட்சியர்!
பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - மதுரை ஆட்சியர்!
பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி – மதுரை ஆட்சியர்!

தமிழக அரசின் உத்தரவு படி செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி பேருந்துகளில் 50% மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தாக்கத்தின் காரணமாக நாடு முழுவதும் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. அதனை தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இருப்பினும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டது.

செப்டம்பர் 30 முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்துவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திருப்தி அடையாத நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் செப்.1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க அனுமதி அளித்தது தொடர்ந்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பள்ளிகளில் தொடர்ந்து சுத்திகரிப்பது சமூக இடைவெளி முதலியன பின்பற்றப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அதனை தொடர்ந்து மதுரையில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர் மற்றும் எஸ்.பி ஆய்வு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து செய்தியாளரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பள்ளி பேருந்துகளில் 50 % மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் திறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் கூறியுள்ளார். முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!