‘ரஜினி மக்கள் மன்றம்’ கலைப்பு – அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சூப்பர் ஸ்டார்!
இந்திய திரையுலகத்தில் ஒரு முக்கிய புள்ளியாக கருதப்படும் திரைப்பட நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மக்கள் மன்றத்தையும் கலைத்து தமிழக அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் இருந்து விலகல்
தமிழக திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் ரஜினிகாந்த், சினிமாவை போல அரசியல் வாழ்க்கையிலும் ஈடுபட இருப்பதாக அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் நடைபெற இருந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எண்ணிய அவர், அதற்கான ஆயத்த பணிகளை துவங்கிய நிலையில் திடீரென உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், அரசியலை விட்டு விலகுவதாகவும் அவர் அறிவித்தார். இது ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தாலும், பின்னர் அந்த முடிவை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர்.
தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க அனுமதி – அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், வரும் காலங்களில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை எனவும் அரசியல் வாழ்க்கையை விட்டு முற்றிலுமாக விலகுவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், ‘ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். நான் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்த பின்னாக ரஜினி மக்கள் மன்றத்தின் நிலை என்னாயிற்று என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டியது எனது கடமை.
TN Job “FB
Group” Join Now
நான் முதலாவதாக அரசியல் கட்சியை ஆரம்பித்த போது, ‘ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம்’ என்பதை ‘ரஜினி மக்கள் மன்றம்’ ஆக மாற்றி, பல நலத்திட்ட உதவிகளை செய்து பல சாதனைகளை புரிந்தோம். எனினும் இவற்றை தொடர முடியாமல் போனது. எனினும் வரும் காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்பதால், ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து விட்டு ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக, மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் தொறந்து செயல்படுத்தப்படும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.