பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால் சலுகை…!! அரசாணை வெளியீடு…!!
தமிழக சட்டசபையில் சமீபத்தில் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பெண்களின் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டால் பதிவு கட்டணத்தில் 1% சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக முக்கிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, பெண்களின் முன்னேற்றத்தை நோக்கமாக அறிவிக்கப்பட்ட இந்த சலுகை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது வரும் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























