அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் – அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

0
அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் - அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் - அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
அண்ணன் குழந்தையுடன் தனுஷ் எடுத்த புகைப்படம் – அண்ணி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

தமிழ் திரைப்பட இயக்குனர் செல்வராகவனிற்கு மூன்றாவதாக பிறந்த மகனுடன், அவரது சித்தப்பாவான நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்களை, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த தனுஷ் ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

தனுஷ் புகைப்படம்:

செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் தான் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லீலாவதி என்ற மகளும் ஓம்கார் மற்றும் ரிஷிகேஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர்.

தனது 3 வயது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் அவரது கடைக்குட்டி மகனை செல்வராகவனின் தம்பி தனுஷ் தூக்கி வைத்திருக்கும் புகைப்படங்களை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”வணக்கம் சித்தப்பா, நான் கிங் காங் விளையாடலாமா?” என்று குழந்தை கேட்பது போல் பதிவு செய்துள்ளார். அதற்கு தனுஷின் மனைவி ஐஸ்வர்யா, மிக அழகாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்.

சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!

செல்வராகவன் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். நீண்ட காலத்திற்கு பின்னர் செல்வராகவன் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தனுஷ் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!