சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!

0
சன் டிவி 'ரோஜா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!
சன் டிவி 'ரோஜா' சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் - அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!
சன் டிவி ‘ரோஜா’ சீரியலில் வரப்போகும் அடுத்த ட்விஸ்ட் – அர்ஜுன், பாட்டியின் புதிய சதி!

சன் டிவி ரோஜா சீரியலில் இன்றைய எபிசோடில், பிச்சைக்காரர்களை அழைத்து வந்து சாப்பிட வைக்கிறார் அர்ஜுன். பின்னர் அனு பிச்சைக்காரர்களுக்கு தங்கத்தை தானமாக கொடுக்க வேண்டும் என சொன்னதால் பாட்டி சதி செய்து கொடுக்க விடாமல் செய்கிறார்.

ரோஜா சீரியல்:

சன் டிவி “ரோஜா” சீரியலில் இன்று, அர்ஜுன் அனுவை பழிவாங்க பிச்சைக்காரர்களுக்கு சாப்பாடு போட்டு தங்கத்தை தானமாக வழங்க வேண்டும் என சொல்கிறார். அதை கேட்ட பாட்டி டென்ஷன் ஆகிறார். பின்னர் பிச்சைக்காரர்கள் டைனிங் டேபிளில் சாப்பிடுவதை பார்த்து பாட்டியும் அனுவும் அருவருப்பு படுகின்றனர். சாப்பிட்டு முடித்துவிட்டு பிச்சைக்காரர்கள் நன்றி சொல்ல, அனுவை பார்த்த பிச்சைக்கார ஜோடி, பூரி ஜகந்நாதர் கோவிலில் காணாமல் போன தங்கள் மகள் போல இருப்பதாக கூறுகின்றனர்.

கண்ணனை மீண்டும் சேர்த்து கொள்ளும் தனம் & கதிர்? வெளியான புகைப்படம்!

உடனே ரோஜா குறுக்கிட்டு சாந்தமூர்த்தி அப்பா அனுவை பூரி ஜகந்நாதர் கோவிலில் இருந்து தான் கூட்டிவந்ததாக சொல்வார் என தெரிவிக்கிறார். அதை கேட்டதும் பாட்டி அதிர்ச்சி அடைந்து அனு என் பேத்தி என சொல்லி சண்டை போடுகிறார். அதன் பின் யாகம் செய்யும் அய்யர் அனுவின் நகையை கழற்றி கொடுக்கும் படி கூறுகிறார். 8 பவுன் நகையை நான் தரமாட்டேன் என அவர் சொல்ல, பாட்டி அதை கொடுக்கா விட்டால் ஜெயலிலுக்கு போக சொல்வான் அர்ஜுன் என சொல்கிறார்.

இந்நிலையில் அனுவின் நகையை கைப்பற்ற பாட்டி ஒரு திட்டமிடுகிறார். அதன் படி போலியான நகையை மாற்றி வைக்கும்படி பாட்டி பாலுவிடம் கூறுகிறார். அவரும் அய்யரிடம் சென்று 2000 ருபாய் பணம் கொடுத்து போலியான கவரிங் நகையை அங்கு வைக்கிறார். அதை பெற்றுக்கொண்டு அய்யரும் நகையை மாற்றி வைத்து விடுகிறார். பின்னர் அந்த நகையை தானமாக கொடுக்கும் போது ரோஜா கண்டுபிடித்து விடுகிறார். போலி நகையை வைத்ததால் பாட்டியை அர்ஜுன் திட்டுகிறார். அதன் பின்னர் உண்மையான நகையை பிச்சைக்காரர்களிடம் கொடுக்கின்றனர். அவர்கள் அனைவரையும் வாழ்த்தி விட்டு செல்கின்றனர்.

ஹேமா தன்னுடைய மகள் என தெரிந்து கொண்ட கண்ணம்மா? வெளியான புகைப்படம்!

அதன் பின்னர் ஏற்கனவே அர்ஜுன் சொன்ன திட்டம் போல அனு DNA டெஸ்ட் எடுக்க உள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு என்ன அவசியம் என பாட்டி கேட்க, தனக்கு குழந்தை பிறந்தால் அதற்கு ஒரு அடையாளம் வேண்டும், அதனால் தான் டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க போவதாகவும் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!