திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!!”  இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை…!!

0
????????????????? ??????? ????? ????????????? ??????...!!"  ?????? ???????? ?????????? ?????...!!
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி...!!"  இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை...!!

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி…!!”  இயல்பு நிலைக்கு திரும்பும் மதுரை…!!

மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலை மீது  காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆடு மற்றும் கோழி பலி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதனால்,  திருப்பரங்குன்றம் மலையை காக்க இந்து அமைப்பினர் போராட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியானது.

 

மக்களின் கவனத்திற்கு.. நாளை (06-02-2025) பவர்கட் செய்யப்படும் பகுதிகளின் லிஸ்ட் இதோ..

இதனை தொடர்ந்து, இந்த மத கலவரத்தை தடுப்பதற்காக நேற்று முன்தினம் (03.02.2025) மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை அறிவித்தார். அதன்பின், திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவிற்கு பக்தர்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது  பக்தர்கள் சென்று வழிபட இன்று (05.02.2025) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கட்சியாகவோ, இயக்கமாகவோ மட்டுமே செல்ல தடை விதிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!