இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – டெல்லி அரசு உத்தரவு!!

0
இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் - டெல்லி அரசு உத்தரவு!!
இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் - டெல்லி அரசு உத்தரவு!!
இன்றும், நாளையும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல் – டெல்லி அரசு உத்தரவு!!

டெல்லியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஐந்து பேருக்கு மேல் ஒரு பொது இடத்தில் கூட அனுமதி அளிக்கப்படாது.

இரவு நேர ஊரடங்கு:

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரி உள்ளிட்ட சில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கி உள்ளன. அதே சமயம் தமிழகம், டெல்லி உள்ளிட்ட பல மாநில அரசுகள் புத்தாண்டு இரவு நேர கொண்டாட்டத்திற்கு தடை விதித்து உள்ளன.

ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

தற்போது டெல்லி அரசு வெளியிட்டு உள்ள அறிக்கையில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்பட்டு உள்ளது. இதனால் ஐந்து பேருக்கு மேல் ஒரு பொது இடத்தில் ஒன்றுகூட அனுமதிக்கப்படாது மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள், நிகழ்வுகள் அல்லது கூட்டங்கள் இரவு 11 மணிக்குள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

முன்னதாக புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது உணவகங்கள் மற்றும் பார்கள் அவற்றின் 50 சதவீதத்திற்கு மேல் நபர்களை அனுமதிக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மால்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பார்கள் ஆகியவற்றில் போலீசார் கெடுபிடி பலப்படுத்தப்படும். மேலும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அதிகாரிகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

எஸ்சி & எஸ்டி மாணவர்களின் முழு கல்விக்கட்டணம் – அரசு ஏற்பு!!

டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 677 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள், மேலும் 21 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இது மொத்த எண்ணிக்கையை 6,24,000 ஆக உயர்த்தியுள்ளது. இங்கிலாந்து உருமாறிய கொரோனா பரவல் அச்சத்துக்கு மத்தியில், நவம்பர் 25 முதல் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பிய பயணிகளுக்காக நான்கு தனியார் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை அமைக்க டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!