ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

0
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

2021 ஜனவரி 1 முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அசாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதனை கண்டிப்பாக பள்ளி நிர்வாகம் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், ஜனவரி 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

அசாம் மாநில அரசு 2021 மார்ச் 31 வரை நடப்பு கல்வி ஆண்டை நீட்டித்து உள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 2021 ஜனவரி 1 முதல் தொடக்கப் பள்ளிகளை (முதலாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை) மீண்டும் திறக்க அம்மாநில முடிவு செய்துள்ளது. இருப்பினும், ஆன்லைனில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு ஆன்லைன் கல்வி முறை தொடரும். மேலும் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவு!!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஒவ்வொரு மாற்று நாளிலும் வகுப்புகள் நடத்தப்படும். IV மற்றும் V வகுப்பை பொறுத்தவரை, ஒவ்வொரு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் முறையான வகுப்புகள் நடத்தப்படும்.

முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் முறையான வகுப்புகள் நடத்தப்படும்.

TNPSC குரூப் 1 வினாத்தாள் 2021 – தேர்வு மையத்திற்கு வருகை, தீவிர கண்காணிப்பு!!

I முதல் V வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் காலை 09:00 மணி முதல் தொடங்கி மதியம் 1:45 மணிக்கு வகுப்புகள் நிறைவடையும். மதிய உணவு இடைவேளை 12:15 மணி முதல் 1 (45 நிமிடங்கள்) மணி வரை விடப்படும். தொடக்க பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை விடுதிகள் திறக்கப்படாது.

ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர தேவையில்லை. இது பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே இருக்கும். மேலும் கல்வி நிறுவன வளாகத்தில் அடுத்த உத்தரவு வரும் வரை பொழுதுபோக்கு கலாச்சார செயல்பாடு மற்றும் கூட்டங்கள் போன்றவை நடத்த அனுமதி இல்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!