இந்தியாவின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவை – பிரதமர் மோடி டிச.28இல் துவக்கி வைக்கிறார்!!
இந்தியாவில் முதன்முறையாக ஓட்டுனர் இல்லாத மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 28-ஆம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தில் தொடங்கி வைக்கவுள்ளார்.
ரயில் சேவை தொடக்கம்:
நாட்டின் முதல் ஆளில்லா ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற டிசம்பர் 28-ஆம் தேதி டெல்லி மெட்ரோ கழகத்தில் கொடி அசைத்து துவக்கிவைக்க உள்ளார். டெல்லி மெட்ரோவின் 37 கி.மீ நீளமுள்ள மெஜந்தா பாதையில் ஜனக்புரி மேற்கு – தாவரவியல் பூங்கா இடையிலான, 37 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படவுள்ளது. இந்தியாவின் முதல் ஓட்டுனர் இல்லாத ரயில் என்ற பெருமையை இது பெறுகிறது.
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
மேலும் ‘ஒரே நாடு, ஒரே அட்டை’ (NCMC) திட்டத்தையும் துவக்கி வைக்கவுள்ளார். இத்திட்டத்தின் படி பணவர்தனை டிஜிட்டல் முறையில் நடைபெறும் இந்த கொரோனா காலத்தில் நேரடி பணவர்தனை ஆபத்தாக உள்ளதால் ஆன்லைன் பணவர்தனைக்கு ஊக்குவிக்கப்படும் நோக்கில் இந்த திட்டம் உள்ளது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்த அட்டையை கொண்டு மெட்ரோ ரயில் பயணம் மட்டுமின்றி நாடு முழுவதும் பஸ் பயணம், சுங்கச்சாவடி,அரசு வாகன நிறுத்த கட்டணம் ஆகியவை செலுத்த முடியும். மேலும் கடைகளில் பொருட்கள் வாங்கவும், எடிஎம்-ல் பணம் எடுக்கவும் பயன்படுகிறது.
பொங்கல் பரிசு வாங்க முகக்கவசம் கட்டாயம் – தமிழக அரசு அறிவிப்பு!!!
ஏற்கனவே பஜக அரசு ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த நிலையில் ‘ஒரே நாடு ஒரே அட்டை’ திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.