சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு கடன் உதவி – மாநில முதல்வர் அறிக்கை!!!

0
சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு புதிய கொள்கை- மாநில முதல்வர் அறிக்கை
சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு புதிய கொள்கை- மாநில முதல்வர் அறிக்கை
சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு கடன் உதவி – மாநில முதல்வர் அறிக்கை!!!

டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் 9-வது பட்டமளிப்பு விழாவின் போது பேசிய முதல்வர் கெஜ்ரிவால் சுயதொழில் செய்ய விருப்பமுள்ள மாணவர்களுக்கு அரசு சார்பில் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு மானிய கடன் உதவி வழங்கப்படும் என்று கூறினார்.

புதிய திட்டம்:

டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகத்தில் 1003 மாணவர்களுக்கு நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் பேர் அதிகம் பட்டம் பெற்றனர். இதில் 445 மாணவர்கள் பட்டப்படிப்பும், 504 மாணவர்கள் முதுகலையிலும், 51 மாணவர்கள் எம்பிஎல் படிப்பிலும், 4 மாணவர்கள் பிஎச்டி பட்டமும் பெற்றனர். இதில் 65 சதவிகித மாணவிகள் டிஜிட்டல் வழியாக பட்டம் பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை வகித்தார்.

ஜனவரி 4 முதல் கல்லூரிகள் திறப்பு- மாநில அரசு அறிவிப்பு!!

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறுகையில்,”டெல்லி அரசு சுயதொழில் தொடங்க விரும்பும் மாணவர்களை ஊக்குவிக்க தனிக்கொள்கை உருவாக்க உள்ளது. அதன்படி இன்று பட்டம் பெறும் மாணவர்கள் தாமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அனைவர்க்கும் வேலை வழங்கும் அளவிற்கு முன்னேற வேண்டும். வேலை வழங்கும் நபராக மாறி இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும். நீங்கள் அரசியலிலும் களமிறங்க வேண்டும். மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்கேற்பதை தவிர்த்து வருகிறார்கள், அது முற்றிலும் தவறு ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியலில் பங்கு இருக்க வேண்டும்.

இன்று பட்டம் பெறும் மாணவர்களில் எவரேனும் சுயதொழில் தொடங்க ஆசைப்பட்டால் டெல்லி அரசு அவர்களுக்கு புதிய கொள்கை ஒன்றை உருவாக்கி உதவி செய்யும். பல மாணவர்கள் சுயதொழில் செய்யும் எண்ணத்தில் இருந்தாலும் அவர்களுக்கு எப்படி முதல் படியை எடுத்து வைப்பது, யாரிடம் ஆலோசனை பெறுவது, எப்படி நிதி திரட்டுவது, வங்கிக்கடன் எப்படி பெறுவது போன்ற பல குழப்பங்களோடு உள்ளனர்.

ஜே.இ.இ மெயின் நுழைவு தேர்வு புதிய விதிமுறைகள்- தேசிய தேர்வு முகமை வெளியீடு!!!

அவர்களுக்கான தெளிவான கொள்கை ஒன்றை அரசு தயாரிக்கும் அதன்படி சட்டரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் ஆலோசனை வழங்கப்படும். மேலும் மாணவர்கள் வங்கி கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்து தரப்படும். இந்த வங்கி கடன் மானியமாகவும் வழங்கப்படும். பிறகு மாணவர்கள் சுய தொழில்களை சுலபமாக பெறலாம். தொழில் தொடங்க விருப்பம் இல்லாத மாணவர்களுக்கு உயர்படிப்பிற்கான உதவித்தொகையும் டெல்லி அரசு வழங்கும். டெல்லி அரசு மாணவர்களுக்காக ரூ.10 லட்சம் வரை வழங்கும்

தொடர்ந்து பேசிய அவர், உலகம் முழுவதும் பல நாடுகளின் பல ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. அந்த நாடுகளுக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் ஆராய்ச்சிகளில் பங்கு பெற வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்தியா ஆராய்ச்சியிலும் மிகவும் பின்தங்கியுள்ளது. அதையும் இந்திய மாணவர்கள் மேம்படுத்த வேண்டும்”, என அவர் தெரிவித்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here