
IPL 2025: தொடரில் நடைபெற்ற முதல் சூப்பர் ஓவர்.. மிட்செல் ஸ்டார்கின் அபார பந்து வீச்சால் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி..!!
டெல்லியில் நேற்று (16-04-2025) நடைபெற்ற IPL தொடரின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்த நிலையில் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இந்த சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 0.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 11 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து, டெல்லி அணி 4 பந்தில் 13 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
B.E / B.Tech முடித்தவர்க்கு ரூ.25,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – இறுதி வாய்ப்பு!
இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் நிதிஷ் ரானா அரை சதம் அடித்தனர். மறுபுறம் டெல்லி அணிக்காக விளையாடிய கே.எல். ராகுல் (38), அபிஷேக் பொரேல் (49), அக்சர் பட்டேல் (34), ஸ்டப்ஸ் (34), அஷுடோஷ் சர்மா (15) ஆகியோர் அதிகபட்ச ரன்களை எடுத்தனர். மேலும், டெல்லிக்கு எதிராக 20 ஆவது ஓவரில் பந்து வீசிய சந்தீப் சர்மா IPL வரலாற்றில் மிக நீண்ட ஓவரை வீசினார். இதை தொடர்ந்து, சூப்பர் ஓவரில் மிட்செல் ஸ்டார்க் அபாரமாக பந்து வீசி தொடர்ச்சியாக இரண்டு பந்துகளில் ராஜஸ்தான் அணியின் இரண்டு பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

























