
மீண்டும் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்.. முக்கிய முடிவுகள் பற்றி விவாதிக்கப்படும் என தகவல்..!!
2025 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிவிப்பிற்கு முன்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்குப் பிறகு அதாவது “இன்று (17-04-2025) மீண்டும் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதில் சுற்றுலா – கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆகியவற்றின் மானியக் கோரிக்கை மீது விவாதம், அமைச்சர்கள் பதிலுரை, வாக்கெடுப்பு ஆகியவை நடக்க உள்ளது”.
இதை தொடர்ந்து, “சென்னை தலைமைச் செயலகத்தில் மாலை 6.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு வரும் புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது மற்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது”.

























