
வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்..அதி வேகத்தில் சூறைக்காற்று வீசும்..!! ” இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் நேற்று தெரிவித்தது. இந்நிலையில், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து கரையை கடக்கும் என்று அறிவித்த நிலையில், தற்போது சென்னைக்கு 400 கி.மீ தொலைவில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 2 நாட்களுக்குள் வலுவிழக்காமல் கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மேலும், காரைக்கால்-மாமல்லபுரம் மற்றும் புதுச்சேரி அருகே நாளை 30ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்றும் அப்போது 55 முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று மற்றும் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.


























