விஜய் டிவி சீரியலில் இருந்து விலகிய தர்ஷா குப்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி பிரபல சீரியல்களில் ஒன்றான “செந்தூரப்பூவே” சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த தர்ஷா குப்தா தற்போது அந்த சீரியலில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தூரப்பூவே:
விஜய் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகம். குறிப்பாக பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த வரிசையில் “செந்தூரப்பூவே” சீரியலும் பிரபலமாக உள்ளது. இந்த சீரியலில் 90’ஸ் நடிகர் ரஞ்சித் ஹீரோவாக நடிக்கிறார். சின்னத்திரையில் இதுவே இவருக்கு முதல்முறை ஆகும்.
புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் – பிரபல நிறுவனம் அதிரடி!
கடந்த வாரம் இவரது மனைவி பிரியா ராமன் இவருடன் இணைந்து நடித்தார். இவருக்கு இரண்டாவது மனைவியாகவும் ஹீரோயினாக ஸ்ரீ நிதி என்பவர் நடிக்கிறார். மிகவும் விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் வில்லியாக குக் வித் கோமாளி புகழ் தர்ஷா குப்தா நடித்தார். அவரும் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரமாக இருக்கிறார். சமூக வலைதலங்களில் அவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் இன்றைய எபிசோடில் தர்ஷா குப்தா மாற்றப்பட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளது. புதிதாக ஒருவரை காட்டுகின்றனர். இவர் யார் பெயர் குறித்த விவரங்கள் தெரியவில்லை. முக்கிய கதாபாத்திரத்தில் இருந்து தர்ஷா விலகியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.