புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் – பிரபல நிறுவனம் அதிரடி!

0
புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் - பிரபல நிறுவனம் அதிரடி!
புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் - பிரபல நிறுவனம் அதிரடி!
புதிய ஊழியர்களுக்கு BMW, KTM Bikes, Apple Gadgets இலவசம் – பிரபல நிறுவனம் அதிரடி!

டெல்லியை சேர்ந்த பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான BharatPe, தனது தொழில்நுட்பக் குழுவில் இணையவுள்ள புதிய ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ, கேடிஎம் பைக், ராயல் என்பீல்ட் இமாலயன், ஆப்பிள் தயாரிப்புகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.

சலுகை அறிவிப்பு

பாரத் பே ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது வளர்ச்சியை மென்மேலும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் அந்நிறுவனத்துடன் புதிதாக இணையவுள்ள ஊழியர்களுக்கு சில சலுகைகள் மற்றும் வெகுமதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது பாரத்பே நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவில் இணையவுள்ள 100 புதிய இணைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு மேலாளர்கள் இந்த சலுகைகளுக்கு தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சலுகையை பொறுத்தளவு பாரத்பே நிறுவனம் புதிதாக இணைந்தவர்களுக்கு இரண்டு வித்தியாசமான வெகுமதிகளை வழங்குகிறது.

தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு!

அதன் கீழ் புதிதாக இணையும் ஊழியர்கள் பைக் தொகுப்பு அல்லது கேஜெட் தொகுப்பு உள்ளிட்ட இரண்டு தொகுப்புகளில் ஒன்றை தேர்வு செய்ய விருப்பம் அளிக்கப்படும். பைக் தொகுப்பில் BMW G310R, ஜாவா பெராக், KTM டியூக் 390, KTM RC 390 மற்றும் ராயல் என்பீல்ட் இமாலயன் உள்ளிட்ட ஐந்து வகையான பைக்குகள் உள்ளன. கேஜெட் தொகுப்பில் ஆப்பிள் ஐபேட் புரோ, போஸ் ஹெட்ஃபோன், ஹர்மன் கார்டன் ஸ்பீக்கர், சாம்சங் கேலக்ஸி வாட்ச், WFH மேசை மற்றும் நாற்காலி மற்றும் பயர்பாக்ஸ் டைபூன் 27.5 டி சைக்கிள் ஆகியவை அடங்கும்.

இது தொடர்பாக பாரத்பே அளித்துள்ள தகவலின் கீழ், இந்த தொகுப்புகள் நிறுவனத்தின் பரிந்துரை மற்றும் இணைப்புக் கொள்கையின் ஒரு பகுதியாகும். பாரத்பே நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஷ்னீர் குரோவர், நிறுவனத்தில் புதிதாக இணைந்தவர்களுக்கு பிஎம்டபிள்யூ பைக்குகள் மற்றும் கேஜெட்களை வழங்குவதை உறுதி செய்துள்ளதாக விளக்கம் கொடுத்துள்ளது. தற்போது, அந்நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழுவில் சுமார் 60 பணியாளர்கள் உள்ளனர். இதற்கிடையில், நடப்பு நிதியாண்டில் பல்வேறு பணிகளில் ஆட்களை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தனது தொழில்நுட்பக் குழுவின் பலத்தை மூன்று மடங்காக உயர்த்துவதாக பாரத்பே தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இதனுடன் வணிகர் மற்றும் நுகர்வோர் கடன் வழங்கும் இடத்தில் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில், பாரத்பே நிறுவனம் 370 மில்லியன் அமெரிக்க டாலர்களை, இந்திய மதிப்பில் சுமார் ரூ .2,745.8 கோடி நிதி திரட்டியுள்ளது. தற்போது, பாரத்பே UPI பயன்பாடுகளுக்கும் ஒற்றை இடைமுகத்தை வழங்குகிறது. இதன் மூலம் பாரத் பே கியூஆர் மூலம் வணிகர்கள் இலவசமாக UPI கட்டணங்களை ஏற்க அனுமதிக்கிறது. இதனுடன் பாரத்பே, சென்ட்ரம் பைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் உடன் இணைந்து ஒரு சிறிய நிதி வங்கியை நிறுவுவதற்கு ரிசர்வ் வங்கியிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!