Daily Current Affairs July 19 2021 in Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0
Daily Current Affairs July 19 2021 in Tamil
Daily Current Affairs July 19 2021 in Tamil

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 19 ஜூலை 2021

Top Current Affairs July 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

சர்வதேச நிகழ்வுகள்

நாற்கர கூட்டமைப்பு

  • பிராந்திய நாடுகளிடையே போக்குவரத்து தொடர்பை மேம்படுத்தும் நோக்கில் ஒரு புதிய நாற்கர கூட்டமைப்பை உருவாக்க அமெரிக்கா , ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய  நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன .
  • வர்த்தகத்தை விரிவாக்குதல், போக்குவரத்து இணைப்பை  ஏற்படுத்துதல் , பிராந்திய நாடுகளின் நிறுவனங்களிக்கிடையே வர்த்தக உறவை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இந்த நாற்கர கூட்டமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.

ஜார்ஜியாவில் மகாத்மா காந்தியின் சிலையை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

  • ஜார்ஜியாவில் மகாத்மா காந்தியின் சிலையை மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் திறந்து வைத்தார். இந்த விழா திபிலிசி பூங்காவில் நடைபெற்றது, அவருடன் ஜோர்ஜிய வெளியுறவு மந்திரி டேவிட் சல்காலியானியும் இருந்தார்.
  • ஜார்ஜியாவிற்கு தனது இரண்டு நாள் பயணத்தின் போது, 17 ஆம் நூற்றாண்டின் நினைவுச்சின்னங்களையும், கெட்டேவன் மகாராணி ஜார்ஜியாவிற்கும், ஜார்ஜியா மக்களுக்கும் திபிலீசியில் நடந்த விழாவில் ஒப்படைத்தார்.

ஜார்ஜியா

  • தலைநகரம் : திபிலிசி
  • நாணயம்: ஜார்ஜிய லாரி
  • பிரதமர்: இராக்லி கரிபாஷ்விலி
  • தலைவர்: சலோம் சராபிச்ச்விலி

யுனிசெப்பின் (UNICEF) நிர்வாக இயக்குனர் ஹென்றிட்டா ஃபோர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

  • ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குடெரெஸ், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசர நிதியத்தின் (UNICEF) நிர்வாக இயக்குநராக ஹென்றிட்டா ஃபோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார்.

UNICEF – United Nations Children’s Fund

ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்):

  • தலைமையகம்: நியூயார்க், அமெரிக்கா
  • நிர்வாக இயக்குனர்: ஹென்றிட்டா ஹோல்ஸ்மேன் ஃபோர்
  • இந்தியாவில் யுனிசெப் பிரதிநிதி: டாக்டர் யாஸ்மின் அலி ஹக்
தேசிய நிகழ்வுகள்

நாடாளுமன்ற மழைக்கால  கூட்ட தொடர்

  • நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13 ம் தேதி முடிவடைகிறது .பல்வேறு பிரசனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளனர்
  • இந்த கூட்டத்தொடரில் பார்வையாளருக்கு அனுமதி இல்லை. 33 கட்சிகளை சேர்ந்த 40 பேர் கலந்து கொள்கின்றனர் .
  • இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .
  • இவற்றில் 3 மசோதாக்கள் சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக அமையும் .
  • இவற்றில் ஒன்று ” அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம் – 2021″ – இது அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகளில் ஈடுபடுவோர் கிளர்ச்சி மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்கிறது .
  • பொதுவாக அவசர சட்டங்கள் , நாடாளுமன்ற அமர்வு தொடங்கிய 6 வாரங்களுக்குள் முறைப்படி மசோதா தாக்கல் செய்து சட்டம் ஆகாவிட்டால் கலவாதியாகிவிடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது ஆகும்

10 புதிய வந்தேபாரத் ரயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

  • நாட்டில் உள்ள 40 முக்கிய நகரங்களுக்கு இடையே 10 புதிய வந்தேபாரத் ரயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • நம் நாட்டில் தற்போது 2 வந்தேபாரத் ரயில்கள் இயக்கபட்டு வருகின்றன .
  • இந்தியாவின் அதிவேக ரயிலாக கருதப்படும் இந்த வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 160 கி .மீ வேகத்தில் செல்லக்கூடியது .
  • 16 குளிர்சாதன பெட்டிகளுடன் தயாரிக்கப்படும் இந்த ரயிலில் 1128 பேர் பயணிக்க முடியும் . மேலும் இந்த ரயிலில் ஜி .பி .எஸ் , ஹாட் -ஸ்பாட்  உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன .
  • அதன்படி கடந்த ஆண்டு மேலும் 44 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு ஹைதராபாத்தை சேர்ந்த ” மேதா சர்வோட்ரைவ்ஸ் லிமிடெட் ” நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்

  • கேரளத்தில் வரதட்சணை தடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் வரதட்சணை தடுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் .
  • குழந்தைகள் நல மேம்பாட்டு அதிகாரிகள் வரதட்சணை தடுப்பு அதிகாரிகளாக செயல்படுவர்.
  • வரதட்சணை தடுப்பு தலைமை அதிகாரியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு  துறை இயக்குனர் செயல்படுவார் .
  • வரதட்சணைக்கு முடிவு கட்ட வலியுறுத்தி அந்த மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் அண்மையில் ஒருநாள் உண்ணாவிரதம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

செல்போன் – லேப்டாப் வங்கி (கேஜெட் வங்கி)

  • ஏழை மாணவ – மாணவிகளின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ஜார்கண்ட் மாநில போலீசார் செல்போன் – லேப்டாப் வங்கி (கேஜெட் வங்கி ) ஒன்றை தொடங்கி உள்ளனர்.
  • வசதி உள்ள மக்களிடம் இருந்து பயன்படுத்தாத செல்போன் , லேப்டாப் போன்ற கருவிகளை தானமாக பெற்று ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
  • இதற்காக ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செல்போன் – லேப்டாப் வங்கி (கேஜெட் வங்கி) தொடங்கப்பட்டுள்ளது.

ஜார்கன்ட்

  • தலைநகர் – ராஞ்சி
  • ஆளுநர்– ரமேஷ் பைஸ்
  • முதல்வர் -ஹேமந்த் சோரன்

ரஞ்சனா பிரகாஷ் தேசாய் குழு

  • மாநிலமாக இருந்த ஜம்மு -காஷ்மீர் , லடாக் என் இரு யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பிறகு அங்கு தொகுதி சீரமைப்பு பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது .
  • இதற்காக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது .
  • இந்தக்குழு அங்குள்ளவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் அடிப்படையில் வரைவு அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

Try Today Current Affairs Quiz

பொது விநியோக முறையை மேம்படுத்துவதற்காக  ராஜஸ்தான் அரசு  உலக உணவுத் திட்டத்துடன் கைகோர்த்துள்ளது

  • ராஜஸ்தானில் இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறையை (TDPS) மேம்படுத்த இந்தியாவில் ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டமும் (ராஜஸ்தான் அரசும்) கைகோர்த்துள்ளன.
  • TDPS கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக பயனாளிகளால் பெறப்பட்ட விநியோக மற்றும் உணவு தானியங்களின் டிஜிட்டல் டாஷ்போர்டை உருவாக்க இது உதவுகிறது.

உலக உணவு திட்டம் (WFP)

  • தலைமையகம்: ரோம், இத்தாலி
  • நிர்வாக இயக்குனர்: டேவிட் பீஸ்ல்
  • நிறுவப்பட்டது: 1961

ராஜஸ்தான்

தலைநகரம்: ஜெய்ப்பூர்

முதல்வர்: அசோக் கெஹ்லோட்

ஆளுநர்: கல்ராஜ் மிஸ்ரா

மாநில நிகழ்வுகள்

400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு, கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் சுமார் 400 400 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு , கல்தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சுமை தங்கி கல் வடிவில் உள்ள கல்தூண் 7 அடி உயரத்தில் உள்ளது
அறிவியல் & தொழிற்நுட்பம்

அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எம் .ஹெச் -60 ஆர் (MH-60R) அதிநவீன ஹெலிகாப்டர்கள்

  • அமெரிக்காவிடம் இருந்து 24 எம் .ஹெச் -60 ஆர் (MH-60R) ஹெலிகாப்டரை சுமார் 17,750 கோடி மதிப்பில் வாங்குவதற்கு பிப்ரவரி  2020 ல் இந்தியா ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது .
  • இந்த ஹெலிகாப்டர்களை அமெரிக்காவின் லாக்ஹுட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்தது
  • இந்த ஹெலிகாப்டர் அனைத்து காலநிலையிலும் இயங்கும் திறன் கொண்டது . மேலும் நீர்முழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கவல்ல ஏவுகணைகளையும் இந்த ஹெலிகாப்டரில் இருந்து ஏவ முடியும்.
  • இந்நிலையில் 2 எம் .ஹெச் -60 ஆர்(MH-60R) ஹெலிகாப்டர்களை இந்திய கடற்படையிடம் அமெரிக்க கடற்படை ஒப்படைத்துள்ளது.
  • இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையின் தாக்குதல் திறனை மேலும் வலுப்படுத்தும்  என்று கூறப்பட்டுள்ளது.

கடற்படையிடம் 25 புதிய ரக துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன

  • திருச்சி படைக்கலன் தொழிற்சாலையில் “ஆத்ம நிர்பார் பாரத் “திட்டத்தின் ஒரு பகுதியாக கடற்படைக்காக ரிமோட் கன்ட்ரோல் தொழிற்நுட்பத்துடன் இயங்கும் வகையில் எஸ்ஆர்சிஜி (SRCG) வகை துப்பாக்கி தயாரிக்கப்படுகிறது.
  • இந்த 7 எம் எம், எம் 2 நேட்டோ ரக துப்பாகியானது இந்திய கடற்படை , கடலோர காவல் படை, கப்பல்களில் பயன்படுத்தக்கூடியது.
  • பகல், இரவு நேரத்தில் இலக்கை துல்லியமாக கண்டறிந்து தாக்கும் சாதனங்களை உள்ளடக்கிய  இந்த துப்பாக்கியை சிறிய, பெரிய படகுகளில் பொருத்தலாம்
  • இந்த துப்பாக்கிகளை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைகளிடம் ஒப்படைக்கப்பட்டன

SRCG – Stabilized Remote Controlled Gun

ஐ என் எஸ் (INS) சிந்து ஷாஸ்ட்ரா

  • இந்திய கடற்படைக்கு சொந்தமான ஏவுகணை தாங்கிய அதிநவீன நீர்முழ்கி கப்பல் ஐஎன்எஸ் சிந்து ஷாஸ்ட்ரா தூத்துக்குடி வ உ சி துறைமுகத்துக்கு வருகை புரிந்துள்ளது .
  • ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த நீர்முழ்கி கப்பல் , இந்திய கடற்படையில் உள்ள சிந்துகோஷ் வகையை சேர்ந்த 10வது கப்பலாகும் .
  • சுமார் 300 கி .மீ தொலைவுக்கு பாய்ந்து சென்று தரை , வான் மற்றும் கடல் இலக்கை தாக்கும் அதிநவீன குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கையால் தூக்கி செல்லும் அளவிலானா சிறிய ஏவுகணைகள் , நவீன ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன

நடமாடும் உடனடி  ராணுவ பாலம் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது .

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்(DRDO) வடிவமைத்த உடனடி ராணுவ பாலம் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டது .
  • ராணுவ வீரர்களும் , ராணுவ வாகனங்களும் ஆறுகளையும் பள்ளங்களையும் கடந்து செல்ல உடனடி பாலங்கள் தேவைப்படுகிறது .
  • இத்தகைய பாலங்களை DRDO வடிவமைத்து வருகிறது .
  • இதன் அமைப்பு ஏறக்குறைய 9.5 மீட்டர் இடைவெளி மற்றும்இதன்  அகலம் 4 மீட்டராக உள்ளது .இவை ராணுவ டேங்க் உள்ளிட்ட கனரக வாகனங்களின் எடையை தாங்க வல்லது .
  • ஏற்கனவே 12 குறுகிய இடைவெளி உடனடி பாலங்கள் ராணுவத்தின் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன .

DRDO– Defence Research & Development Organisation.

  • தலைமையகம் – நியூடெல்லி
  • தலைவர் – சதீஸ் ரெட்டி
  • ஆரம்பிக்கப்பட்ட வருடம் – 1958
நியமனம்

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டுள்ளார் .

  • பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங்  சித்து நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதற்கு முன்பு மாநில காங்கிரஸ் தலைவராக சுனில் ஜாக்கர் இருந்தார்.
 விளையாட்டு

டி .என் .பி .எல் (TNPL) கிரிக்கெட்

  • தமிழ்நாட்டில் கிராம அளவிலும் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை அடையாளம் கண்டு வெளிக்கொணரும் நோக்கில் உருவாக்கப்பட்ட பிரீமியர் லீக் (டி .என் .பி .எல்) 20 ஓவர் கிரிக்கெட் 2016 ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது .
  • இதுவரை சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 2 முறையும் , தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் ஒரு முறையும் , மதுரை பாந்தாஸ் ஒரு முறைக்கு பட்டம் பெற்றுள்ளது
  • இந்த நிலையில் 5 வது டி .என் .பி .எல்  கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது

ஒலிம்பிக்கில் கால்பதிக்கும் முதல் திருநங்கை – லாரல் ஹப்பார்ட்

  • ஒலிம்பிக் போட்டியில் விளையாடப்போகும் முதல் திருநங்கை என்ற வரலாற்று சிறப்பை நியூஸ்லாந்து அணிக்காக பளுதூக்குதல் பிரிவில் பங்குபெறும் லாரல் ஹப்பார்ட் பெறுகிறார்.
  • திருநங்கைகள் பெண்களோடு மோதுவதை அனுமதித்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவர்களுக்கென்று பிரத்யேக விதிமுறைகளை வகுத்துள்ளது.
  • ஒரு ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் டெஸ்டோஸ்ட்டிரோனின் (ஆண்களுக்கான ஹார்மோன்) அளவு ஒரு லிட்டருக்கு 10 க்கும் குறைவான நானோமோல்ஸ் இருக்க வேண்டும் என்பது முக்கியமான விதிமுறை ஆகும்.
  • 2012 ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை லாரல் ஹப்பார்ட் ஆண்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் பங்கேற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

“நோ-காஸ்ட்லிங்” செஸ் போட்டி- விஸ்வநாத் ஆனந்த்

  • டார்ட்மண்டில் நடைபெற்ற “நோ-காஸ்ட்லிங்” செஸ் போட்டியில் ரஷ்ய கிராண்ட்மாஸ்டர் விளாடிமிர் க்ராம்னிக்கை இந்தியாவின் விஸ்வநாத் ஆனந்த் வீழ்த்தினார்

பாபர் அசாம் 14 ஒருநாள் சதங்களை அடித்த அதிவேக பேட்ஸ்மேன் ஆனார்

  • பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் இன்னிங்ஸைப் பொறுத்தவரை 81 போட்டிகளில் 14 ஒருநாள் சதங்களை அடித்த அதிவேக பேட்ஸ்மேன் ஆனார்.
  • அவர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் ஹாஷிம் அம்லா (84 போட்டிகள்), இந்திய கேப்டன் விராட் கோலி (103 போட்டிகள்), ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் (98 போட்டிகள்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்

ஒலிம்பிக் ஒரு பார்வை

  • இரண்டாம் உலகப்போர் நடைபெற்றதால் 1940,1944 ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை .அதற்க்கு அடுத்து 12 ஆண்டுகள் கழித்து 1948ல் லண்டனில் போட்டிகள் நடைபெற்றன

1932- லாஸ் ஏன்ஜெல்ஸ் ஒலிம்பிக்ஸ்

  • ஒலிம்பிக் கிராமம் முதல் முறையாக கட்டப்பட்டு , எதிர்கால போட்டிகளுக்கும் மாதிரியாக கொள்ளப்பட்டது .
  • வெற்றி படிக்கட்டுகளும் முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது .
  • தங்கப்பதக்கம் வென்ற வீரரின் நாட்டு தேசீய கீதம் இசைக்கப்பட்டது

1936- பெர்லின் ஒலிம்பிக்ஸ்

  • முதன் முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒலிம்பிக் போட்டி இதுவாகும்.

1924- பாரிஸ் ஒலிம்பிக்ஸ்

  • 1924 – ல் இரண்டாவது முறையாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்திய நகரம் என்ற பெருமையை பெற்றது
  • இதற்க்கு முன்பு 1900 ம் ஆண்டு  பாரிஸில் நடைபெற்றது
  • இந்த ஒலிம்பிக் போட்டியில் தான் முதன் முறையாக போட்டி நிறைவு விழா நடத்தப்பட்டது
  • சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் கொடி , போட்டியை நடத்தும் நாட்டின் கொடி , அடுத்த போட்டியை நடத்தும் நாட்டின் கொடிகளை ஏற்றும் வழக்கம் தோன்றியது .
  • சுதந்திர நாடாக அயர்லாந்து முதல்முறையாக பங்கேற்றது

1928- ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக்ஸ்

  • நெதர்லாந்தில் நடைப்பெற்ற இந்த ஒலிம்பிக்கில் தான் முதல்முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது .
  • இந்திய ஹாக்கி அணி இப்போட்டியில் தான் தனது முதல் ஒலிம்பிக் தங்கத்தை வென்றது .
  • ஆசிய தடகள வீரர்களும் முதல் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்
  • முதல் முறையாக கோககோலா ஸ்பான்ஸராக இப்போட்டியில் பங்கேற்றது

ஐனாக்ஸ் குழுமம்(Inox Group) இந்திய ஒலிம்பிக் குழுவை ஆதரிக்க புதிய பிரச்சாரத்தைத் தொடங்குகிறது

  • இந்திய ஒலிம்பிக் அணியின் அதிகாரப்பூர்வ ஆதரவாளராக ஐனாக்ஸ் குழு உள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இந்திய அணியை ஆதரிப்பதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் இது ஒரு புதிய பிரச்சாரத்தை வெளியிட்டுள்ளது.
  • இந்த பிரச்சாரத்தில் குத்துச்சண்டை வீரர்கள் எம்.சி மேரி கோம் மற்றும் விகாஸ் கிரிஷன் யாதவ் மற்றும் டேபிள் டென்னிஸ் வீரர் மாணிக்க பத்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
புத்தகம்

 ‘The Great Big Lion’ என்ற புத்தகத்தை  கிறைசிஸ் நைட் எழுதியுள்ளார்

  • 7 வயதான கனடாவின் இளம் எழுத்தாளர் கிறைசிஸ் நைட்  ‘The Great Big Lion’’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் .
  • அவரது புத்தகம் ‘தி கிரேட் பிக் லயன்’ என்ற தலைப்பில் பெங்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்டது.
முக்கிய தினங்கள்

காதம்பினி  கங்குலி – ஜூலை 18

  • நாட்டின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவரான காதம்பினி கங்குலியின் 160 வது பிறந்தநாள் விழா ஜூலை 18 அன்று கொண்டாடப்பட்டது .
  • ஆனந்தி ஜோஷியுடன் இணைந்து காதம்பினி கங்குலியும் பிரிட்டிஷ் இந்தியாவில் முதல் முதலாக மருத்துவம் படித்த பெண்ணாக அறியப்பட்டவர் .
  • காதம்பினி கங்குலி, திரமுகி பாசு ஆகிய இருவரும் நாட்டின் முதல் பெண் பட்டதாரிகளாவர் .

சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் – ஜூலை 18

  • சர்வதேச நெல்சன் மண்டேலா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் மண்டேலாவின் வாழ்க்கையையும் மரபுகளையும் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • பெண்களுக்கு எதிரான வன்முறை, இனப்படுகொலை மற்றும் குற்றங்களுக்காக செயல்படும் அமைப்புகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஆவார்
  • இந்த ஆண்டிற்கான கருப்பொருள் : “ஒரு கையால் இன்னொருவருக்கு உணவளிக்க முடியும்”.

Try Today Current Affairs Quiz

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!