ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 03, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 03, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

  • 2025 க்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக சுகாதார சேவை செலவுகளை உயர்த்த அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது என்று சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.
  • அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் குவஹாத்தியையும் டாக்காவையும் இணைக்கும் முதல் சர்வதேச விமானத்தை குவஹாத்தியில் உள்ள போர்ஜார் விமான நிலையத்தில் துவக்கிவைத்தார்.
  • ராஜஸ்தானில், பிகானேர் மாவட்டத்தில் உள்ள கலு காவல் நிலையம் சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 15,666 காவல் நிலையங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் மதிப்பீட்டில் முதல் இடத்தைப் பிடித்தது.
  • வயநாட்டில் உள்ள ஆதியா பழங்குடியினர், தங்களது சடங்கு கலை வடிவமான ‘நடுகாதிகா’வின் ஒரு பகுதியாக ‘நடூஜியல்’ என்னும் கலையை தொடங்கியுள்ளனர்.
  • ஜம்மு-காஷ்மீரில் 312 பஞ்சாயத்துகளை புகையிலை இல்லாததாக மாற்ற ஜம்மு பிரிவின் எல்லை மாவட்டமான ராஜோரியில் “ஆபரேஷன் குமார்” என்று ஒரு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஐ.நா. பாலஸ்தீன அகதிகள் நிறுவனத்திற்கு 2019 ஆம் ஆண்டில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
  • வஹாலி தீக்கரி யோஜனா என்பது குஜராத்தில் சிறுமிகளுக்கு கல்வி கற்பிப்பதற்காகவும், பாலின விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் குழந்தை திருமணத்தைத் தடுப்பதற்கான ஒரு புதிய திட்டமாகும்.
  • கர்நாடக மத்திய பல்கலைக்கழகத்தின் (CUK) துணைவேந்தர் எச்.எம். மகேஸ்வரையா சர்வதேச திராவிட மொழியியல் பள்ளியின் (ISDL) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1985 (Batch) சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான ஜலாத் கே. திரிபாதி, புதிய காவல்துறை தலைமை இயக்குநராக / காவல்துறை தலைவராக பொறுப்பேற்கிறார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 03 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here