தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அறிவிப்பு எப்போது?

0
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு எப்போது?
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அறிவிப்பு எப்போது?
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – அறிவிப்பு எப்போது?

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்தான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இது தொடர்பான தகவல்களை இப்பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சம்பள உயர்வு:

தமிழக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசை தொடர்ந்து சம்பள உயர்வான அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை வெளியாகும் இந்த அறிவிப்புகள் நடப்பு ஜனவரி முதல் ஜூலை மாதத்திற்கு இன்னும் வெளியாகவில்லை. மத்திய அரசு வரும் மார்ச் மாதத்தில் தனது ஊழியர்களுக்கான டிஏ உயர்வை அறிவிக்கும். அதனை தொடர்ந்து ஏப்ரல் மாத வாக்கில் தமிழக அரசு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 ஆண்டில் உங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி வேண்டுமா? – போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டம் பெஸ்ட்!

தற்போது அரசு ஊழியர்கள் 46 சதவீதம் பெற்று வரும் நிலையில இம்முறை கூடுதலாக நான்கு சதவீதம் உயர்த்தி வழங்கி மொத்தம் 50 சதவீதமாக அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று தெரிய வருகிறது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். மேலும் கூடுதலான பண பலன்களையும் ஊழியர்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!