ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு..!! “தனியார் வானிலை ஆய்வாளர் பேட்டி”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “காற்றின் வேகம் சுமார் 64.8km/hr(35 நாட்ஸ்) வீசினால் அதை புயல் என்று கூறுவோம். தற்போதுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 83 km/hr(45 நாட்ஸ்) வரை வலுப்பெற வாய்ப்பு” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், வானில் மேகக்கூட்டங்கள் அடர்த்தியாக காணப்படுவதால், இன்று பிற்பகல் முதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து, மரக்காணத்தில் இன்றும் நாளையும் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.



























