முழு சந்திர கிரகணம்

0

 முழு சந்திர கிரகணம்

150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு ஆகும் .  சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.

ஜனவரி மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால், மாலை 6.50 மணிக்குப் பிறகே பொதுமக்கள் பார்க்க முடிந்தது.

கூடுதல் பிரகாசம்
  • இந்த சந்திர கிரகணம் ஜனவரி மாதத்தில் 2-வதாக வரும் பவுர்ணமி தினத்தன்று  நிகழ்ந்துள்ளது. மேலும் சந்திர கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் பூமிக்கு அருகில் நிலவு வந்ததால் இயல்பைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் தெரிந்தது.
  • அதனால் இந்த நிகழ்வு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு 152 ஆண்டுகளுக்கு முன்பு, 1866-ம் ஆண்டு நிகழ்ந்துள்ளது.
  • இந்த சந்திர கிரகணம் மாலை 5.18 மணிக்கு தொடங்கியது. சென்னையில் மாலை 6 மணிக்குப் பிறகே அடி வானத்தில் இருந்து நிலவு மேலெழுந்ததாலும், அப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதாலும் மாலை 6.50 மணிக்கு பிறகே சந்திர கிரகணத்தை பொதுமக்கள் பார்க்க முடிந்தது.
  • அப்போது பூமியின் நிழல் மெல்ல மெல்ல நிலவை மறைத்து, இரவு 7.38 மணி அளவில் முழுமையாக மறைந்து முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நிலவு மீது இருந்த நிழல் படிப்படியாக விலகி இரவு 8.41 மணி அளவில் முழுமையாக விலகியது.
  • இதனை முன்னிட்டு சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!