நடப்பு நிகழ்வுகள் QUIZ மே 17 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ  மே 17 2019

நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Video கிளிக்செய்யவும்

உலக உயர் இரத்த அழுத்த தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

உலக சுகாதார நிறுவனம் [WHO] உயர் இரத்த அழுத்தம் குறித்து 2005ம் ஆண்டில் உலகளாவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியது, இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மே 17ம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விசா நீட்டிப்பு பற்றி இந்தியா எந்த நாட்டுடன் விவாதித்தது?

தற்போது ஈரானிற்கு வரும் இந்தியப் பயணிகளுக்கு விசா-ஆன்-அரைவல் எனும் வருகையின் போது பேப்பர் விசா வழங்கும் முறையை பின்பற்றுகிறது. ஈரானிய விசாக்கள் இந்தியர்களுக்கு ஆன்லைனிலும் வழங்கப்படுகின்றன. ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜவாத் ஜரிபின் வருகையைத் தொடர்ந்து , இந்தியா ஈரானுடன் 11 ஆவது கவுன்சிலர் குழு கூட்டத்தை நடத்தியது.

UNDRR 2019ற்கான சசாகாவா விருது வென்றவர் யார்?

இந்தியப் பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பிரமோத் குமார் மிஸ்ராவுக்கு பேரழிவு ஆபத்து குறைப்புக்கான ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (UNDRR) சசாகாவா விருது - 2019 வழங்கப்பட்டது.

லோக்பால் மற்றும் லோகாயுக்தா சட்டம் எந்தாண்டு அமைக்கப்பட்டது?

லோக்பால் மற்றும் லோகாயுக்தா - 2013 சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட முதல் அமைப்பு, லோக்பால் ஆகும்

எந்த ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் லென்ஸ் மூலம் ஸ்மார்ட்போனை நுண்நோக்கியாக மாற்றியுள்ளனர்?

இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாம்பே ஆராய்ச்சியாளர்கள் நுண்ணோக்கலின் சக்திக்கு ஸ்மார்ட்போன் கேமிராக்களை உயர்த்துவதற்கு குறைந்த விலை லென்ஸ்களை வடிவமைத்துள்ளனர். 1.4 மைக்ரோமீட்டர் தெளிவுத்திறன் கொண்ட லென்ஸ், இது இயற்கை இடைமுகத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

கேரளாவின் ESAF வங்கி 2019 நிதியாண்டில் எத்தனை % லாபம் ஈட்டியது?

கேரளாவை அடிப்படையாகக் கொண்ட ESAF சிறிய நிதி வங்கி லிமிடெட் நிறுவனம் அதன் இரண்டாம் வருடத்தில், 2019 நிதியாண்டில் அதன் நிகர இலாபத்தில் 234% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது, இது பெரும்பாலும் அதிக வட்டி வருமானம் மற்றும் திறமையான NPA மேலாண்மையால் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார் ?

லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக நீதிபதி ஸ்ரீ பினாக்கி சந்திர கோஸ், 2019 மார்ச் 23 ம் தேதி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த பல்கலைக் கழகத்திற்கான ஐரோப்பிய விருதை எந்த பல்கலைக்கழகம் வென்றது?

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (VIT), UNICA-வின் உயர் கல்வியை சர்வதேசமயமாக்கியதற்கான சிறந்த பல்கலைக்கழகத்திற்கான விருதை வென்றது. UNICA, ஐரோப்பாவின் பெல்ஜியம், பிரஸ்ஸல்ஸை தலைமையகமாக கொண்ட ஒரு பல்கலைக்கழக நெட்ஒர்க் ஆகும்.

விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் எந்த நாடு தடை செய்துள்ளது ?

சீனாவில் அனைத்து மொழி பதிப்புகளையும் உள்ளடக்கிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா விக்கிபீடியாவை தடை செய்தது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here