நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 16, 2019

0
நடப்பு நிகழ்வுகள் QUIZ மார்ச் 16, 2019

SVEEP – தேர்தல் ஓட்டளிக்கும் விழிப்புணர்வு முகாம் எங்கு நடைபெற உள்ளது ?

கர்நாடகா SVEEP – தேர்தல் ஓட்டளிக்கும் விழிப்புணர்வு முகாம் மக்களவைத் தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, சீர்திருத்த வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்களிப்பு (SVEEP) பிரச்சாரத்தின் கீழ் தாலுக் மட்டத்தில் இளைஞர் மத்தியில் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இளம் பருவத்தினர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம் எங்கு தொடங்கப்பட்டது ?

தெலுங்கானா இளம் பருவத்தினர்களுக்கு ஊட்டச்சத்து திட்டம் இளம் பருவத்தினர் மத்தியில் ஊட்டச்சத்து பிரச்சனைக்கு தீர்வு காண, ICRISAT, தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (NIN) மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) இணைந்து ‘Iron for Adolescents’ or ‘FeFA’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. FeFa என்பதின் விரிவாக்கம் Fe – இரும்பு, FA – For Adolescents’ என்பதை குறிக்கும்.

ஜெ.எம். தலைவர் மசூத் அசாரை ஐ.நா. வின் 1267 தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க எந்த நாடு முடிவு செய்துள்ளது ?

ஜெ.எம். தலைவர் மசூத் அசாரை ஐ.நா. வின் 1267 தடை செய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்க புது தில்லியில் முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச தீவிரவாதியாக மசூத் அசாரை அறிவிக்க இந்தியாவின் முயற்சிக்கு 15இல் 14 ஐ. நா பாதுகாப்பு உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

மார்ச் 16 மற்றும் 30 ஆம் தேதிகளில் ஸ்லோவாகியாவின்----- வது நேரடி ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற உள்ளது ?

ஸ்லோவாகிய ஜனாதிபதித் தேர்தல் 2019, மார்ச் 16 மற்றும் 30 ஆம் தேதி என இரண்டு சுற்றுகளாக நடைபெறுகிறது. இது ஸ்லோவாகியாவின் ஐந்தாவது நேரடி ஜனாதிபதி தேர்தல் ஆகும்.

வெப்ப மண்டல சூறாவளியான ஐடாய் ------ நாட்டின் மத்திய பகுதியை தாக்கியது?

வெப்ப மண்டல சூறாவளியான ஐடாய் மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியை தாக்கியது, இதில் 19 பேர் இறந்தனர் மற்றும் 70 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

2020 ஆம் ஆண்டில் யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை எந்த நாடு நடத்தவுள்ளது?

2020 ஆம் ஆண்டில் யு -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா ----- தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றது?

ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளைஞர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றது.

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA) நான்காவது கூட்டம் ----- அன்று நடைபெற்றது ?

ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் சபையின் (UNEA) நான்காவது கூட்டம் 2019 மார்ச் 11 முதல் 15 வரை நைரோபியில் நடைபெற்றது.

ஆளில்லா வான்வழி வாகனங்களை உருவாக்க எந்த நாடு முடிவு செய்துள்ளது ?

ஆளில்லா வான்வழி வாகனங்களை உருவாக்க இந்தியா-அமெரிக்க முடிவு

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here