நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 05, 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 05, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

ஆர்ஆர்பி ஆட்சேர்ப்பு தேர்வுகள் எத்தனை பிராந்திய மொழிகளில் நடத்தப்பட உள்ளன?

பிராந்திய கிராமப்புற வங்கிகள், ஆர்ஆர்பிக்களின் ஆட்சேர்ப்பு தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமின்றி கூடுதலாக 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

எந்த மாநில அரசு கட்டணமில்லா முதல்வர் ஹெல்ப்லைன் 1076 ஐ அறிமுகப்படுத்துகிறது?

உத்தரபிரதேசத்தில், மாநில அரசு கட்டணமில்லா முதலமைச்சர் ஹெல்ப்லைன் 1076 ஐ அறிமுகப்படுத்தியது, இது மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் தங்கள் புகார்களைப் பதிவுசெய்ய உதவும், மேலும் புகார்கள் குறித்து அவசரகால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதி செய்யும்.

எந்த மாநில அரசின் சாலை திட்டதிற்காக 358 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது ?

மத்திய அரசு திரிபுரா மாநிலத்திலுள்ள கிராமப்புறங்களில் புதிய சாலைகள் அமைக்க கூடுதல் தொகையாக ரூபாய் 358 கோடியை மத்திய அரசு வழங்கியது. மேலும் இது மாநிலத்தில் முடிக்கப்படாத திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளை முடிக்க மாநில அரசுக்கு உதவியாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷுக்கும் எந்த நாட்டுக்கும் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன?

பங்களாதேஷுக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன இதில் மியான்மரில் இருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயற்த்தப்பட்ட ரோஹிங்கியாக்களுக்கு சீனா 2,500 மெட்ரிக் டன் அரிசியை பங்களாதேஷுக்கு வழங்கப்பட்டதும் ஒரு பகுதியாகும். ஒன்பது ஒப்பந்தங்களில் – ஐந்து ஒப்பந்தங்கள், மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ஒரு ஆவணம் ஆகும் . பங்களாதேஷ் பிரதம மந்திரி ஷேக் ஹசீனா மற்றும் சீன நாட்டு பிரதம மந்திரி லி கெக்கியாங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

பிரஞ்சு அரசு இணைய நிறுவனங்களுக்கு எத்தனை சதவீதம் வரி விதிக்கவுள்ளது ?

பிரஞ்சு அரசு இணைய நிறுவனங்களுக்கு 3% வரி விதிக்கவுள்ளது

நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி எத்தனை சதவீதம் வளரச்சி அடையும் என பொருளாதார ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது?

2018-19ற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2019-20ம் நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. மேக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுகையில், இந்திய பொருளாதாரம் 2018-19ல் 6.8 க்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நம் நாட்டின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார துறை அமைச்சர் யார் ?

2018-19ற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்

இந்திய அரசியலமைப்பில் எந்த சரத்தில் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது?

இந்திய அரசியலமைப்பில் ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான சரத்து 112 ஆகும். பட்ஜெட் என்ற சொல் நமது இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை.

30 வது நாப்போலி 2019 கோடைக்கால யுனிவர்சியேட் நிகழ்வில் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றவர் யார் ?

இத்தாலியில் நடைபெற்ற 30 வது நாப்போலி 2019 கோடைக்கால யுனிவர்சியேட் நிகழ்வில் இளவேனில் வாலரிவன் பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்றார்.

செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் ?

பிராங்க் லம்பார்ட் செல்சியா கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார், மவுரிசியோ சர்ரிக்கு பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரரான பிராங்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 05, 2019 video – Click Here

சாதனையாளர்களின்பொன்மொழிகள் 

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here