ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18 2018

 • கோழிக்கோட்டில் மனநிலை பாதித்தவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை நோக்கமாகக் கொண்ட கேரளத்தின் முதல் திறன் கஃபே திறக்கப்பட்டுள்ளது.
 • சர்வதேச தொலைத்தொடர்பு கழகம் (ITU) தெற்காசிய பகுதி அலுவலகம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம் புது டெல்லியில் நிறுவப்படும்.
 • சைபர் அச்சுறுத்தலைக் குறைப்பதற்காக சைபர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு மகாராஷ்டிரா அரசு நடவடிக்கை.
 • திரிபுரா தலைநகரான அகர்தலாவில் விண்வெளி தொழில்நுட்ப இன்குபேசன் மையத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) துவக்கியது.
 • சிட்டகாங் மற்றும் மோங்க்லா துறைமுக பயன்பாட்டிற்காக இந்தியாவுடன் வங்கதேச அமைச்சரவை ஒப்பந்தம் செய்துள்ளது.
 • மலிவான லித்தியம் பேட்டரிகளை IIT ஹைதராபாத் – சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்தது
 • வெளிநாட்டுப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கான புதிய KYC விதிமுறைகளை இந்திய பங்குச் சந்தை மற்றும் செலாவணி வாரியம் (செபி) அங்கீகரித்துள்ளது.
 • சஞ்சய் அகர்வால்புதிய செயலாளர், வேளாண்மை
 • ப்ரீதம் சிங்செயலாளர், பட்டியல் சாதியின் தேசிய ஆணையம் (NCSC)
 • வங்கதேத்தின் டினாஜ்புர் மாவட்டம் – இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியை இணைக்கும் 130 கிலோ மீட்டர் குழாய்த்திட்டத்திற்கு இந்தியா மற்றும் வங்கதேசம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
 • ரூ.9,100 கோடி மதிப்புள்ள கருவிகள் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு கொள்முதல் குழு ஒப்புதல்
 • சிரியாவின் மத்திய தரைக்கடல் கடலோரப் பகுதியில் இராணுவ விமானம் Il-20 காணாமல் போயுள்ளது.
 • தெற்கு சீனக் கடலில் ஜப்பான் அதன் முதல் நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியை நடத்தியது.
 • யுஎஸ் கடற்படை அமைப்பின் 23 வது சர்வதேச கடற்சக்தி கருத்தரங்கின் பதிப்பில் கலந்துகொள்ள இந்தியக் கடற்படைத் தளபதி அமெரிக்காவின் ரோட் தீவிற்கு விஜயம் செய்தார்.
 • தலாய் லாமாகாந்தி குளோபல் பவுண்டேசனின் காந்திதர்ஷன் சர்வதேச விருது [கேரளா]
 • அருண் ஜேட்லிகாந்திதர்சன் தேசிய விருது
 • பினராயி விஜயன்சிறந்த முதலமைச்சர் விருது
 • எம்.ஏ. யூசுப் அலி, பி.ஆர். ஷெட்டி மற்றும் பி. கோவிந்தன்வணிக விருதுகள்
 • ஜோசப் புளிகன்னெல்மனித நேயத்திற்கான விருது
 • கர்நாடகாவில் கக்கூன்களின் இ-ஏலத்திற்கு – கர்நாடகா அரசின் ஆளுமை விருது.
 • மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த ஆண்டினை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் இலச்சினை மற்றும் இணையப் பக்கத்தை வெளியிட்டார்.
 • மத்திய உள்துறை செயலாளர் ஸ்ரீ ராஜீவ் கௌபா பாதுகாப்பு அனுமதி வழங்குவதற்கான ஆன்லைன் ‘இ-சஹாஜ்’ போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
 • நல்ல ஆளுமையை மேம்படுத்துவதற்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஸ்ரீ. எஸ்.எஸ். அலுவாலியா C-DAC தகவல் ஊடக சேவையகத்தை (சிஐஎம்எஸ்) அறிமுகப்படுத்தினார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!