நடப்பு நிகழ்வுகள் – மே 16 2019

0

நடப்பு நிகழ்வுகள் – மே 16 2019

முக்கியமான நாட்கள்

மே 16 – அமைதியாக இணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினம்

 • அமைதி, சகிப்புத்தன்மை, ஒருங்கிணைப்பு, புரிதல், ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் முயற்சிகளை தொடர்ந்து அணிதிரட்டுவதற்கான ஒரு வழிமுறையாக ஐ.நா. அமைப்பு மே 16-ஐ அமைதியாக இணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
 • அமைதி, ஒற்றுமை, நிலையான உலகத்தை உருவாக்க, வேறுபாடு மற்றும் பன்முகத்தன்மைகளில் ஒற்றுமையாக ஒன்றுபட வாழவும், செயல்படவும் விரும்புவதையே இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மே 16 – சர்வதேச ஒளி தினம்

 • முதன் முதலில் வெற்றிகரமாக லேசர் கற்றையை 1960 மே 16 இயக்கிக்காட்டிய இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியடோர் மைமான் பிறந்தநாளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒளி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் விஞ்ஞான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் சமாதானம், நிலையான வளர்ச்சியை வளர்ப்பதற்கான அதன் திறனைப் பெறுவதற்கான அழைப்பு ஆகும்.

தேசிய செய்திகள்

அருணாச்சல பிரதேசம்

இந்தியாவின் 35% கிராஃபைட் வைப்புகள் அருணாச்சலத்தில் உள்ளது

 • இந்திய நாட்டின் 35 சதவீத கிராஃபைட் வைப்புக்கள் அருணாச்சல பிரதேசத்தில் காணப்படுகின்றன என்று இந்தியாவின் புவியியல் ஆய்வு [GSI] மையம் தெரிவித்துள்ளது.
 • இட்டாநகரில், புவியியல் & சுரங்கத் துறை மற்றும் அருணாச்சல பிரதேச அரசு இடையே நடைபெற்ற வருடாந்திர சந்திப்பின் பொழுது,  ஜி.எஸ்.ஐ. இந்தத் தகவலை வழங்கியது.

சர்வதேச செய்திகள்

ஆஸ்திரியா நாட்டின் ஆரம்ப பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை

 • ஆரம்ப பள்ளிகளில் ஹிஜாப் எனும் தலைமறைவை அணிவதற்கு தடை விதிப்பதற்கான ஒரு சட்டத்தை ஆஸ்திரியா ஒப்புக் கொண்டுள்ளது. இருப்பினும், சீக்கிய சிறுவர்கள் அணியும் பாட்கா மற்றும் யூதர்கள் அணியும் கிப்பா அணிய எந்த பாதிப்பும் இருக்காது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் தடை செய்தது சீனா

 • சீனாவில் அனைத்து மொழி பதிப்புகளையும் உள்ளடக்கிய ஆன்லைன் என்சைக்ளோபீடியா விக்கிபீடியாவை தடை செய்தது.
 • நெட்வொர்க் குறுக்கீட்டின் (OONI) திறந்த ஆய்வுக்கூடம் வெளியிட்ட அறிக்கையின்படி, சீனா கடந்த மாதம் முதல் விக்கிபீடியாவின் அனைத்து மொழி பதிப்புகளையும் தடை செய்யத் தொடங்கியது.

தகுதி அடிப்படையிலான குடியேற்ற கொள்கையை முன்வைக்கவுள்ளார் டிரம்ப்

 • அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குடும்ப உறவுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு மாறாக தகுதி அடிப்படையில் வெளிநாட்டவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் குடியேற்றக் கொள்கைகளை கொண்ட ஒரு புதிய திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுள்ளார்.
 • இந்த நடவடிக்கை கிரீன் கார்டுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய தொழில் வல்லுனர்களுக்கு காத்திருப்புக்கான காலத்தை குறைக்க வழிவகுக்கும்.

யுஏஇ எண்ணெய்க் கப்பல்கள் சேதம் குறித்த ஆய்வில் யு.எஸ். மற்றும் பிரான்ஸ் இணைந்தது

 • யுஏஇ கடற்கரையில் ஏற்பட்ட வணிக கப்பல்கள் சேதம் குறித்த விசாரணையில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் யுஏஇ உடன் இணைந்தது. ஓமன் கடலில் நான்கு வர்த்தக சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் குறித்த விசாரணைகளில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ், யுஏஇக்கு உதவுகின்றது.

வணிகம் & பொருளாதாரம்

2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதிகள் 1.34 சதவீதம் அதிகரித்துள்ளன

 • ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, வர்த்தகமும், பொருட்களும் இணைந்து, 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட34 சதவீதம் அதிகரித்துள்ளது.

கட்டண அமைப்புக்கான பார்வை ஆவணம்

 • இந்திய ரிசர்வ் வங்கி பாதுகாப்பான, வசதியான, விரைவான மற்றும் மலிவு இ-கட்டண முறையை உறுதி செய்வதற்கான பார்வை ஆவணத்தை வெளியிட்டுள்ளது.
 • டிசம்பர் 2021 ல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகமாக 8,707 கோடி ரூபாயாக உயரும் என தலைமை வங்கி எதிர்பார்க்கிறது. 

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

உத்தரகண்டில் ருத்ராக்ஷ் மரங்கள் நடுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து

 • நமாமி கங்கை திட்டத்தின் கீழ் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரகண்டில் ருத்ராக்ஷ் மரங்களை நடுவதற்காக சுத்தமான கங்கைகான தேசியத் திட்டம், ஹெச்.சி.எல்.[HCL] ஃபவுண்டேஷன் மற்றும் இன்டாச்[INTACH] இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

விருதுகள்

சியெட் கிரிக்கெட் ரேட்டிங் (CCR) சர்வதேச விருதுகள் 2019

 • விராட் கோலி – சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த பேட்ஸ்மேன்
 • ஸ்மிருதி மந்தனா – ஆண்டின் சிறந்த சர்வதேச மகளிர் கிரிக்கெட் வீராங்கனை
 • ஜஸ்பிரிட் பும்ரா – ஆண்டின் சிறந்த சர்வதேச பந்துவீச்சாளர்
 • செத்தேஷ்வர் புஜாரா – ஆண்டின் சிறந்த சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வீரர்
 • ரோஹித் சர்மா – ஆண்டின் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வீரர்
 • ஆரோன் பிஞ்ச் – ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 வீரர்
 • ரஷித் கான் – ஆண்டின் சிறந்த சர்வதேச டி 20 பந்துவீச்சாளர்
 • யஷாஸ்வி ஜெய்ஸ்வால் – ஆண்டின் சிறந்த இளம் கிரிக்கெட் வீரர்
 • குல்தீப் யாதவ் – ஆண்டின் சிறந்த செயல்திறன் மிக்க வீரர்
 • அஷுடோஷ் அமன் – ஆண்டின் சிறந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர்
 • மொஹிந்தர் அமர்நாத் – ‘CCR சர்வதேச வாழ்நாள் சாதனையாளர் விருது’

PDF Download

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் மே 16 2019

Daily Current Affairs – May 16 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here