நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 02 & 03, 2019

0

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 02 & 03, 2019

முக்கியமான நாட்கள்

ஜூன் 02 – அமெரிக்கன் இந்திய குடியுரிமை தினம்
  • ஜூன் 02,1924 இல், ஜனாதிபதி கால்வின் கூலிட்ஜ் இந்திய குடியுரிமைச் சட்டம் சட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த சட்டம் அமெரிக்காவில் பிறந்த அனைத்து அமெரிக்கன் குடிமக்களுக்கும் குடியுரிமை வழங்கியது , ஆயிரக்கணக்கானோர் முதலாம் உலகப் போரின் போது ஆயுதப்படைகளில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 03 – உலக கிளப் ஃபூட் நாள்
  • ஜூன் 3 ம் தேதியை உலக கிளப்ஃபுட் தினமாக Ponseti International Association (PIA) அறிவித்தது . டாக்டர் இக்னேசியோ பொன்சேதி, (1914-2009) பிறந்த தினத்தை நினைவுகூறும் விதமாக இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது.இவர்  கிளப் ஃபூட் நோயை குணப்படுத்தும் பொன்சேதி முறையை கண்டறிந்தவராவார்
  • கிளப் ஃபூட் மிகவும் பொதுவான தசைக்கூட்டு பிறப்பு குறைபாடு ஆகும், இது ஒவ்வொரு வருடமும் 200,000 குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது, இது வளரும் நாடுகளில் 80 சதவிகிதம் ஆகும்.

தேசிய செய்திகள்

91 முக்கிய நீர்த்தேக்கங்களில் வெறும் 20% தண்ணீர் மட்டுமே உள்ளது
  • மேற்கு மற்றும் தென்னிந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு  கடந்த 10 ஆண்டுகளை  காட்டிலும் மிக குறைந்த அளவே உள்ளது எனவும், மேலும் இது மிக  மோசமான தண்ணீர் நெருக்கடியைக் உண்டாக்கும் என மத்திய நீர்நிலை ஆணையம் (CWC) குறிப்பிடுகிறது.
  • குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் கடந்த ஆண்டு மிக குறைந்த பருவ மழை பொழிந்ததால் அம்மாநிலங்களில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலுள்ள நீரின் அளவு மிகவும் குறைந்தே காணப்படுகிறது மேலும் இதில் மஹாராஷ்டிரா மாநிலம் மராத்வாடா பகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது

தெலுங்கானா

தெலுங்கானா மாநிலம் உருவாக்க தினத்தை கொண்டாடுகிறது
  • ஜூன் 2 தேதி 2014 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிளவுபட்டு இந்தியாவின் 29 வது அதிகாரப்பூர்வ மாநிலமாக  தெலுங்கானா மாநிலம்  உருவாக்கபட்டது. இவ்வாண்டு தெலுங்கானா மாநிலம் தனது ஐந்தாம் ஆண்டு உருவாக்க தினத்தை கொண்டாடுகிறது.

மகாராஷ்டிரா

கலை மற்றும் கலாச்சாரத்தின் எலிஃபண்டா திருவிழா
  • எலிஃபண்டா திருவிழா கலை மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமாக மும்பையில் கொண்டாடப்படுகிறது.
  • எலிஃபண்டா குகைகள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத் தளமாகும்.எலிஃபண்டா குகைக்கோவில்களின் தொகுப்பு சிவனுக்கு அர்பணிக்கப்பட்டதாகும்.

மத்தியப் பிரதேசம்

நீர் உரிமையை  அமல்படுத்திய  எம்.பி.
  • மத்தியப் பிரதேச மாநில அரசு ஆண்டு முழுவதும் மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் விதமாக ‘நீர் உரிமை’ என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இம்முயற்சியின் கீழ் அனைத்து குடும்பத்திற்கும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவிற்கு நீர் வழங்கப்படும்.
  • மத்தியப் பிரதேச அரசு ‘நல் ஜால்’ திட்டத்தையும் கொண்டுவந்துள்ளது, இத்திட்டத்திற்கு  NABARD and Asian Bank   மூலம் மணிலா அரசு நிதி உதவி பெறவுள்ளது.

சர்வதேச செய்திகள்

இந்த ஆண்டு இலங்கை, ஜனாதிபதி தேர்தலை நடத்த உள்ளது
  • இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல்கள் நவம்பர் 15 முதல் டிசம்பர் 7 வரை நடைபெறவுள்ளன. அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப, வாக்கெடுப்பு ஜனாதிபதி பதவி முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே நடத்தப்பட வேண்டும்.

வணிக  மற்றும் பொருளாதார செய்திகள்

அதிக லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக  மீண்டும் ONGC
  • நாட்டின் மிக அதிக லாபம் ஈட்டக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக தன்னை நிலைநாட்ட இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம்  இந்திய எண்ணெய் ஆணையத்தை  (IOC) தாண்டி லாபம் ஈட்டியுள்ளது.  பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் வருவாய் அறிக்கையின்படி, ஓஎன்ஜிசி நிறுவனம், 2018-19 நிதியாண்டில் நிகர லாபம் 26,716 கோடி ரூபாயில் 34% உயர்ந்துள்ளது.

நியமனம்

ஐ.ஐ.எம்.சி. கே.எஸ்.தத்வாலியா இயக்குனர் ஜெனரலாக  கூடுதல் பொறுப்பை ஏற்றார்
  • உயர் ஐ.ஐ.எஸ் அதிகாரி கே.எஸ்.தத்வாலியா இந்திய மாஸ் கம்யூனிகேஷன் துறையில் இயக்குநர் ஜெனெரலாக கூடுதல் பொறுப்பை ஏற்றார்.
  • 1984-பேட்ச் அதிகாரியான தத்வாலியா தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முதன்மை இயக்குநர் ஜெனரலாக பணிபுரிகிறார்.
நயீப் புக்கலே எல் சால்வடாரின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்
  • மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டின் ஜனாதிபதியாக நயீப் புக்கலே பதவியேற்றார். சான் சல்வடார் நகரிலுள்ள தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் புக்கலேவுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். சல்வடார் சான்செஸ் செரெனுக்கு அடுத்தபடியாக நயீப் புக்கலே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு செய்திகள்

இந்திய கடற்படை திருட்டு எதிர்ப்பு ரோந்து  நடவடிக்கை
  • இந்தியப் பெருங்கடலில் (IOR) அதன் மிஷன் அடிப்படையிலான கட்டுப்பாடுகள் (IOR) விரிவாக்கமாக, ஓமனின் சலாலாவிலிருந்து திருட்டு எதிர்ப்பு கடற்படை ரோந்து நடவடிக்கையை ஏடன் வளைகுடாவில் மேற்கொள்ள கடற்படை P-8I நீண்ட தூர கடல் கண்காணிப்பு விமானத்தை பயன்படுத்தியுள்ளது. 2008 ஆம் ஆண்டிலிருந்து, ஏடன் வளைகுடாவில் வணிக ரீதியாக முக்கியமான கடற்படை ரோந்துகளை இந்தியா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு திருட்டு எதிர்ப்பு ரோந்து நடவடிக்கைக்காக P-8I விமானத்தை சலாலாவில் இருந்து இயக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

செயலி & வெப் போர்டல்

யோகா மையம், கண்டுபிடிப்பதற்கு ஆயுஷ் அமைச்சு மொபைல்பயன்பாட்டை துவக்கியுள்ளது.
  • AYUSH அமைச்சு மொபைல் பயன்பாடு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் பயன்பாட்டை பயன்படுத்தி யோகா நிகழ்வுகளையும் மையங்களையும் பயிற்சியையும் பயிற்றுவிப்பாளர்களையும் கண்டு அறியலாம்.

விளையாட்டு செய்திகள்

ஐ.டி.எப் ஆண்கள் பியூச்சர்ஸ்  டென்னிஸ்
  • மூன்றாம் இடத்தில உள்ள சிதார்த் ராவத் ஜப்பானின் ரியோ நோஜூச்சியை 7-5, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி  ஐடிஎஃப் ஆண்கள் பியூச்சர்ஸ் டென்னிஸ் போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூன் 02 & 03, 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!