நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 31 2019

0
Daily Current Affairs July 31, 2019

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 31 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

முக்கியமான நாட்கள்

ஜூலை 31 – உலக ரேஞ்சர் தினம்

  • உலக ரேஞ்சர் தினம் ஜூலை 31 ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகிறது, பணியில் கொல்லப்பட்ட அல்லது காயமடைந்த ரேஞ்சர்களை நினைவுகூரும் விதமாகவும், கிரகத்தின் இயற்கை புதையல்கள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க ரேஞ்சர்ஸ் செய்யும் பணியை கொண்டாடவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்திகள்

கர்நாடகா
கர்நாடகாவின் புதிய சபாநாயகர் ஆக விஸ்வேஸ்வர் ஹெக்டே தேர்வு
  • சபாநாயகர் ரமேஷ் குமார் பதவி விலகியதைத் தொடர்ந்து, சிர்சி சட்டமன்றத் தொகுதியின் ஆறு முறை எம்.எல்.ஏவுமான பாஜகவின் மூத்த தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரி கர்நாடகாவின் புதிய சபாநாயகராக தேர்வாகி உள்ளார்.
மகாராஷ்டிரா
சராசரி மழைப்பொழிவை விட 72% அதிகமாக மும்பையில் பெய்துள்ளது
  • இந்த பருவத்தில் சராசரி மழைப்பொழிவு 72% சதவீதத்திற்கும் அதிகமாக மும்பையில் பெய்துள்ளது.

சர்வதேச செய்திகள்

ஒரு நாளில் 200 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நடவு செய்தது எத்தியோப்பியா
  • ஜூலை 29 அன்று எத்தியோப்பியர்கள் 200 மில்லியனுக்கும் அதிகமான மரங்களை நட்டனர், இது உலக சாதனையாக அமையும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். எத்தியோப்பியா மரம் நடும் திட்டத்தின் மத்தியில் உள்ளது, இதன்படி மே மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4 பில்லியன் மரங்களை நடவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இது அந்நாட்டு பிரதமர் அபி அகமதுவின் லட்சிய முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த 6 ஆண்டுகளில் 5-ஜியில் 150 பில்லியன் டாலர் செலவிட சீனா திட்டமிட்டுள்ளது
  • சீனா அடுத்த ஆறு ஆண்டுகளில் 5 ஜி வயர்லெஸ் தொழில்நுட்பத்திற்காக 150 பில்லியன் டாலர் செலவிட திட்டமிட்டுள்ளது, தானியங்கி உற்பத்தியைத் தொடங்கி அதன்மூலம் பெய்ஜிங் செயற்கை நுண்ணறிவில் (AI) உலகத்தில் சிறந்து விளங்க சீனா இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி அளித்தது அமெரிக்கா
  • இலங்கைக்கு மில்லினியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் 480 மில்லியன் அமெரிக்க டாலரை உதவியாக அமெரிக்கா வழங்கியுள்ளது. மேலும் இந்த 480 மில்லியன் டாலர் அமெரிக்க மக்களிடமிருந்து கிடைத்த பரிசு, கடன் அல்ல என்றும் அமெரிக்கா கூறியுள்ளது
வெப்பமண்டல புயல் எரிக் சூறாவளியாக வலுப்பெற்றது
  • அமெரிக்காவில், கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பமண்டல புயல் எரிக் பலமான சூறாவளியாக வலுப்பெற்றது என்று தேசிய சூறாவளி மையம் தெரிவித்துள்ளது.

வணிகம் & பொருளாதாரம்

கார்ப்பரேட்டுகள், வங்கி சாராத கடனளிப்பவர்களுக்கு வெளி வர்த்தக கடன் விதிமுறைகளை ரிசர்வ் வங்கி தளர்த்தியது
  • கார்ப்பரேட்டுகள் மற்றும் பணப்புழக்கம் இல்லாமல் வாடும் வங்கி அல்லாத கடன் வழங்குநர்களுக்கான வெளி வர்த்தக கடன்களுக்கான இறுதி பயன்பாட்டு நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி தாராளமயமாக்கியுள்ளது. இது செயல்பாட்டு மூலதனம், பொது நிறுவன நோக்கக் கடன்கள் அல்லது ரூபாய் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக எடுக்கப்பட்ட வெளிப்புற வணிக கடனுக்கு (ஈசிபி) பொருந்தும்.
2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய ஐடி நிறுவனங்கள் 57.2 பில்லியன் டாலர்களை பங்களித்துள்ளது
  • 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 57.2 பில்லியன் டாலர்களை பங்களித்ததாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா தெரிவித்தார்.

தரவரிசை

உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய் பிரனீத் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார்
  • இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் பி.சாய் பிரனீத் சமீபத்திய உலக பேட்மிண்டன் தரவரிசையில் 4 இடங்கள் முன்னேறி முதல் 20 இடங்களுக்குள் நுழைந்தார். ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் தரவரிசையில் பிரனீத் இப்போது உலக தரவரிசையில் 19ம் இடத்தில் உள்ளார். கிடாம்பி ஸ்ரீகாந்த் 10வது இடத்தையும், சமீர் வர்மா 13வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.

மாநாடுகள்

இ-ஆளுமை 2019 தொடர்பான 22 வது தேசிய மாநாடு ஷில்லாங்கில் நடைபெற உள்ளது
  • நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைகளைத் தீர்க்கும் துறை (DARPG), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் மேகாலயா மாநில அரசு இணைந்து இ-ஆளுமை 2019 தொடர்பான 22வது தேசிய மாநாட்டை 2019 ஆகஸ்ட் 8-9 தேதிகளில் மேகாலயாவின் ஷில்லாங்கில் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. வடகிழக்கு இந்தியப்பகுதியில் இந்த நிகழ்வு முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் “டிஜிட்டல் இந்தியா: சிறப்பிற்கு வெற்றி”[Digital India: Success to Excellence] என்பதாகும்.

நியமனங்கள்

மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் புதிய நிதிச் செயலாளராக நியமனம்
  • மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜீவ் குமார் புதிய நிதிச் செயலாளராக நியமனம். இதற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. தற்போது அவர் நிதி சேவைத்துறையில் செயலாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டங்கள்

சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டத்தை அடல் புதுமை மிஷன் (Atal Innovation Mission) தொடங்குகிறது
  • நிதி ஆயோக்கின் முதன்மை முயற்சியான அடல் புதுமை மிஷன் (Atal Innovation Mission) சமூக கண்டுபிடிப்புக்கான புதிய திட்டத்தை புதுதில்லியில் அறிமுகப்படுத்தவுள்ளது. இப்புதிய முயற்சி நாட்டில் புதிய  கண்டுபிடிப்புகளுக்கான உணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU), ஒப்பந்தங்கள் & மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் நிறைவேறியது நிறுவனங்கள் சட்டத் திருத்த மசோதா
  • நிறுவனங்கள் (சட்டதிருத்த) மசோதா, 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இதன்மூலம் நிறுவனங்கள் சட்டம், 2013 ஐ திருத்துவதற்கு இம்மசோதா வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் பெருநிறுவனங்களுக்கான சமூக பொறுப்புணர்வை அதிகரிக்க, சில பொறுப்புகளை தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திற்கு மாற்றுவது மற்றும் சில குற்றங்களை சிவில் குற்றங்களாக வகைப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இச்சட்டதிருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

விளையாட்டு செய்திகள்

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி
  • தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் மெயின் டிரா பாங்காக்கில் தொடங்கபடவுள்ளது. இந்தியாவின் சார்பாக சாய்னா நேவால், சாய் பிரனீத், கிடாம்பி ஸ்ரீகாந்த், எச் எஸ் பிராணோய், பருப்பள்ளி காஷ்யப் ஆகியோர் இப்போட்டியின் தொடக்க ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.
ஊக்கமருந்து விதிமீறலுக்காக பி.சி.சி.ஐ பிருத்வி ஷாவை இடைநீக்கம் செய்தது
  • இந்திய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா ஊக்கமருந்து விதிமீறலுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) 2019 நவம்பர் 15 வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சிறுநீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டு அதில் டெர்பூட்டலின் இருப்பது உறுதியானதைத் தொடர்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

PDF Download

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!