நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 01, 2019

0

நடப்பு நிகழ்வுகள் ஜூலை – 01, 2019

TNPSC Group 4 OnlineTestSeries 2019

முக்கியமான நாட்கள்

ஜூலை 1 – சரக்கு மற்றும் சேவைகள் வரி நாள்
  • சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) இரண்டாம் ஆண்டு நிறைவை மாண்புமிகு மத்திய நிதித்துறை மற்றும் கார்ப்பரேட் விவகார இணை அமைச்சர் ஸ்ரீ அனுராக் தாக்கூர் தலைமையில் கொண்டாட உள்ளனர். 2017 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி நள்ளிரவு பாராளுமன்றத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விழாவில் 2017 ஜூலை 1 ஆம் தேதி அன்று ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டது. எனவே 2019 ஜூலை 1 ஆம் தேதியன்று, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் கூட்டணியாளர்களுடன் அரசு  ஜிஎஸ்டியின் 2 வது ஆண்டு விழாவைக் கொண்டாடுகிறது.
ஜூலை 1 – தேசிய மருத்துவர்கள் தினம்
  • சமூகம் மற்றும் தனி மனிதருக்கு மருத்துவர்கள் செய்யும் சேவையை அங்கீரிக்க உருவாக்கப்பட்டதே தேசிய மருத்துவர்கள் தினம்.முதல் மருத்துவர் தினம் 1991 ஆம் ஆண்டில் இந்தியாவில் கொண்டாடப்பட்டது. ஜூலை 1, இந்தியாவின் மிகவும் பிரபலமான மருத்துவர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு ஆண்டு தினமாகும். நாட்டின் சுகாதாரத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.

தேசிய செய்திகள்

சாப்ரா சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் நிலையத்தின் 5 மற்றும் 6 வது யூனிட்
  • ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெஹ்லாட் சாப்ரா சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் நிலையத்தின் 5 மற்றும் 6வது யூனிட்டை  திறந்து வைத்தார். இது சூப்பர் கிரிட்டிகல் வெப்ப மின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மாநிலத்தின் முதல் திட்டமாகும், மேலும் இந்த திட்டத்தின் செலவு மதிப்பு 9 ஆயிரத்து 550 கோடி ரூபாய் ஆகும்.
நாகாலாந்து தனது NRC யின் மாறுபாட்டை ஜூலை 10 முதல் தொடங்க உள்ளது
  • அண்டை மாநிலமான அசாம் புதுப்பித்து வரும் தேசிய குடிமக்களின் பதிவேட்டின் (என்.ஆர்.சி) மாறுபாட்டைத் தொடங்க நாகாலாந்து முடிவு செய்துள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்கான 60 நாள் காலக்கெடுவை வழங்கி உள்ளது.

சர்வதேச செய்திகள்

அபுதாபியில் ISA வின் முதல் கூட்டு பாதுகாப்பு பயிற்சி ISALEX19
  • அபுதாபியில் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு கூட்டணியின் முதல் கூட்டு பாதுகாப்பு பயிற்சியில் 50 சட்ட அமலாக்க அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 2017ல் தொடங்கப்பட்ட இந்த சர்வதேச பாதுகாப்புக் கூட்டணி, ஒழுங்கமைக்கப்பட்ட, நாடுகடந்த மற்றும் தீவிரவாத குற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு சர்வதேச செயற்குழு ஆகும்.

அறிவியல் செய்திகள்

நிபா வைரஸிற்கான பரிசோதனை தடுப்பு மருந்து
  • புதிய ஆய்வில், அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள், நான்கு ஆபிரிக்க பச்சை குரங்குகளுக்கு நிபா வைரஸிற்கு எதிரான சிகிச்சையளிக்க ரெம்டெசிவிர்[Remdesivir] பயன்படுத்திக் காட்டியுள்ளனர். ரெம்டெசிவிர்[Remdesivir] தடுப்புமருந்து தற்போது எபோலா சிகிச்சைக்கான 2வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது.

நியமனங்கள்

இந்திய கடலோர காவல்படைத் தலைவர்
  • இந்திய கடலோர காவல்படையின் 23வது தலைவராக ஸ்ரீ கிருஷ்ணசாமி நடராஜன் பொறுப்பேற்றார். 1984-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தார் கிருஷ்ணசாமி நடராஜன். கடலோரக் காவல் படை தலைவராக இருந்த ராஜேந்திர சிங் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டார்.

விளையாட்டு செய்திகள்

U -19 ஆசிய ஸ்குவாஷ் பட்டத்தை வீர் வென்றார்
  • சீனாவின் மக்காவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார் வீர் சோத்ரானி. இறுதிப்போட்டியில் யஷ் ஃபடேவை வீழ்த்தி இந்தியாவின் வீர் தங்கப்பதக்கம் வென்றார். இந்த வெற்றியின் மூலம், ரவி தீட்சித் மற்றும் வேலா செந்தில்குமாருக்குப் பிறகு ஆசிய கோப்பையை வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை வீர் பெற்றார்.

PDF Download

நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 01,02 2019 video – Click Here

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram   Group -ல் சேர – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!